அங்குசம் பார்வையில் . 3:6:9′
அங்குசம் பார்வையில் . 3:6:9′
அப்போது பார்த்து ரிமோட் கண்ட்ரோல் வீல் சேரில் படுபயங்கர டெர்ரர்… பின்னனி இசையுடன் எண்ட்ரியாகிறார் வில்லன் பி.ஜி.எஸ். குமார். அவரைப் பார்த்ததும் மக்கள் மேலும் டெர்.. ரர்… ஆகிறார்கள். ஆனா அவரோ, திடீர்னு வீல் சேரில் இருந்து எந்திரிச்சு கேஷுவலா நடந்து [ என்ன ஒரு வில்லத்தனம்] ஃபாதர் பாக்யராஜ்கிட்ட போறார். டுமீல்… டுமீல்னு இரண்டு பேர சுட்டு மல்லாத்துறாரு. அப்புறம் கீ போர்டு வாசிக்கிறாரு. பாக்யராஜ்கிட்ட எதையோ கேட்டு டீல் பேசுறாரு இந்த இடத்தில் தான் செம ட்விஸ்ட் ஸ்டார்ட் ஆகுது. பாக்யராஜ் பாதர் மட்டுமில்லயாம் உலகத்தையே காப்பாத்தக்கூடிய டிவைஸை கண்டுபிடிச்ச விஞ்ஞானியாம்.
சர்ச்சுக்குள்ளேயே பிரம்மாண்ட சயின்ஸ் லேப் வச்சிருக்காருங்கிறது நமக்குத் தெரியுது. க்ளைமாக்ஸ் என்னவாக இருக்கும்? தீய சத்திகளை பரமபிதா அழிப்பார். இங்கே ஃபாதர் பாக்யராஜ் அழிக்கிறார். அதான் க்ளைமாக்ஸ், ஒரு முழுநீளத் திரைப்படத்தை 20 நிமிடத்தில் எடுத்தது தான் முந்தைய சாதனை. அந்த சாதனையை முறியடித்து 81 நிமிங்களில் இந்த 3:6:9 படத்தை எடுத்து முடிந்திருக்கிறோம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை ” டைட்டில் போட்ட பின்பு படம் ஆரம்பிக்கவுடன் இப்படியெல்லாம் ஓவர்வாய்ஸில் பேசுகிறார் டைரக்டர். 81 நிமிசமோ, 8 நிமிசமோ சாதனைய சரியா சொன்னாத் தான் சாதணை. இல்லேன்னா எல்லோருக்கும் சோதனை, வேதனை தான்.