நேரத்தை மதிக்கத் தெரியாத ஊடகவியலாளர்கள் !

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

நேரத்தை மதிக்கத் தெரியாத ஊடகவியலாளர்கள்

பணியிலிருக்கும் போதும், ஓய்வு பெற்ற பின்னும் மொழியாக்கம், தொலைக்காட்சி விவாதங்கள், கருத்தரங்கங்கள், யூடியூப் நேர்காணல்கள் என பல்வேறு பணிகளை இடைவிடாமல் செய்து பழகி விட்டது. இதில் என் நேரம் என்பது மிக முக்கியமானது. ஆனால் இந்த நேரத்தை பல ஊடகவியலாளர்களும் மதிப்பதே இல்லை.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

பிரச்சினைகளின் பட்டியல் இதோ:

1. 11 மணிக்கு நேர்காணலுக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு 2 மணிக்கு வந்து நிற்பார்கள். தாமதமாகிறது என்கிற தகவலைக் கூடச் சொல்ல மாட்டார்கள் (இந்த செல் பேசி காலத்திலும் கூட)

செம்ம சூப்பரான திரைப்படம்..

2. நீண்ட நேரம் பேசி விட்டு முக்கியமான தகவல்களையும், கோணங்களையும் நம்மிடமிருந்து பெற்று விட்டு, எழுதும் போது போனால் போகிறது என்று ஒரு வரியில் நம் கருத்தாக ஒன்றைப் போட்டு விடுவார்கள்.

4

3. பேசப் போகும் பிரச்சினை குறித்து குறைந்தபட்ச தயாரிப்பு கூட இன்றி வந்து விட்டு காமெராவைப் பார்த்து நீங்களே பேசி விடுங்கள் என்று சொல்லி விடுவார்கள். அந்த உணர்ச்சியற்ற கேமரா நம்மை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்.

4. இரண்டு மணி நேரம் நேர்காணல் செய்து விட்டு அந்த வீடியோவை வெளியிடாமல் தேசிய ரகசியம் போல் அடை காப்பார்கள். கேட்டால் நேரமில்லை என்று சொல்லி விடுவார்கள். நான் செலவழித்த இரண்டு மணி நேரம் கணக்கிலேயே வராது.

5. நேர்காணலுக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு நம்மைக் காக்க வைத்து விட்டு வராமலே போனவர்களும் உண்டு.

6. ஐந்து நிமிடப் பேட்டி தான் என்று சொல்லி போன் செய்து உயிரை எடுப்பார்கள். பேட்டி முடிந்த பிறகு அந்தக் காணொளியை நமக்கு அனுப்ப மாட்டார்கள்.

நாமே தேடிக் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். நமக்குத்தான் ஊர்ப்பட்ட நேரம் இருக்கிறதே….

-விஜயசங்கர் ராமசந்திரன்

5
Leave A Reply

Your email address will not be published.