அங்குசம் பார்வையில் . 3:6:9′

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

அங்குசம் பார்வையில் . 3:6:9′

தயாரிப்பு: பி. எஸ்.புரொக் ஷன்ஸ் &ஃப்ரைடே பிலிம் பேக்டரி, பி. ஜி.எஸ். குமார். இணைத் தயாரிப்பு : எம்.பி. ஆனந்த். நடிகர்- நடிகைகள்: கே. பாக்யராஜ், பிஜிஎஸ், பிளாக்பாண்டி, அங்கையர் கண்ணன், ஆலம் ஷா, ராஜஸ்ரீ, சுபிக்ஷஸா. தொழில் நுட்பக் கலைஞர்கள் : டைரக்ஷன்: சிவ மாதவ், ஒளிப்பதிவு: மாரிஸ்வரன் மோகன் குமார், இசை : கார்த்திக் ஹர்ஷா, எடிட்டிங் : ஆர்.கே.ஸ்ரீநாத். பி. ஆர். ஒ. கே.எஸ்.கே. செல்வா ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருக்கிறார் கே. பாக்யராஜ் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் என்பதால் அந்த ஊர் மக்கள் சாரை சாரையாக சர்ச்சுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

ஃபாதர் பாக்யராஜீக்கு ஸ்தோத்திரம் சொல்லியபடியே சர்ச்சுக்குள் போகிறார்கள். பின்னர் பிரார்த்தனை ஆரம்பமாகிறது. அப்போது திரென நாலஞ்சு பேர் கருப்பு யூனிபார்மில் கைகளில் நவீன மிஷின் கன்களுடனும் வெடி குண்டுகளுடனும் சர்ச்சுக்குள் நுழைந்து மக்களை அலறவைக்கிறார்கள். “அய்யோ.. ஏசப்பா என மக்கள் கதறுகின்றனர். தேமே என்று நின்ற கொண்டிருக்கிறார் ஃபாதர் பாக்யராஜ். ரெண்டு மணி நேர படம் முழுக்க நின்னுக்கிட்டேதான் இருக்கார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

4

அப்போது பார்த்து ரிமோட் கண்ட்ரோல் வீல் சேரில் படுபயங்கர டெர்ரர்… பின்னனி இசையுடன் எண்ட்ரியாகிறார் வில்லன் பி.ஜி.எஸ். குமார். அவரைப் பார்த்ததும் மக்கள் மேலும் டெர்.. ரர்… ஆகிறார்கள். ஆனா அவரோ, திடீர்னு வீல் சேரில் இருந்து எந்திரிச்சு கேஷுவலா நடந்து [ என்ன ஒரு வில்லத்தனம்] ஃபாதர் பாக்யராஜ்கிட்ட போறார். டுமீல்… டுமீல்னு இரண்டு பேர சுட்டு மல்லாத்துறாரு. அப்புறம் கீ போர்டு வாசிக்கிறாரு. பாக்யராஜ்கிட்ட எதையோ கேட்டு டீல் பேசுறாரு  இந்த இடத்தில் தான் செம ட்விஸ்ட் ஸ்டார்ட் ஆகுது. பாக்யராஜ் பாதர் மட்டுமில்லயாம் உலகத்தையே காப்பாத்தக்கூடிய டிவைஸை கண்டுபிடிச்ச விஞ்ஞானியாம்.

சர்ச்சுக்குள்ளேயே பிரம்மாண்ட சயின்ஸ் லேப் வச்சிருக்காருங்கிறது நமக்குத் தெரியுது. க்ளைமாக்ஸ் என்னவாக இருக்கும்? தீய சத்திகளை பரமபிதா அழிப்பார். இங்கே ஃபாதர் பாக்யராஜ் அழிக்கிறார். அதான் க்ளைமாக்ஸ், ஒரு முழுநீளத் திரைப்படத்தை 20 நிமிடத்தில் எடுத்தது தான் முந்தைய சாதனை. அந்த சாதனையை முறியடித்து 81 நிமிங்களில் இந்த 3:6:9 படத்தை எடுத்து முடிந்திருக்கிறோம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை ” டைட்டில் போட்ட பின்பு படம் ஆரம்பிக்கவுடன் இப்படியெல்லாம் ஓவர்வாய்ஸில் பேசுகிறார் டைரக்டர். 81 நிமிசமோ, 8 நிமிசமோ சாதனைய சரியா சொன்னாத் தான் சாதணை. இல்லேன்னா எல்லோருக்கும் சோதனை, வேதனை தான்.

–மதுரை மாறன்
5
Leave A Reply

Your email address will not be published.