மன அழுத்தத்தை தரும் நீட் தேர்வை நீக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

0

மன அழுத்தத்தை தரும்
நீட் தேர்வை நீக்க வேண்டும்:
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரும் நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் தமிழகத்தில் மதுரையை தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகைiயில், தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

- Advertisement -

இதில் திமுக எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

4 bismi svs

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, “இது மாணவர்களின் உயிர்ப் பிரச்சினை. மன அழுத்தம் தராமல் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக, அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் விதமாக இந்த நீட் தேர்வு என்பதை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான்,” என்றார்.

இப்பிரச்சினையை தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கான குரலாகப் பார்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

“நீட் தேர்வு வருவதற்கு முன்பே உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களை நாம் கொண்டுள்ளோம். கரோனா காலத்தில் அனைத்து தொழில்களும் நலிவடைந்த நிலையில், நீட் தேர்வு பயிற்சி மையம் மட்டும் நலிவடையவில்லை.


ஒன்றிய அரசைப் பொருத்தவரை நீட் பயிற்சியை வணிகமாக பார்க்கின்றனர். எங்களைப் பொருத்தவரை எங்கள் மாணவர்களின் உயிர் முக்கியம்,” என்றார் அமைச்சர்.

பிளஸ் டூ முடித்தவுடனே அடுத்தது எம்பிபிஎஸ் சேர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இரண்டு, மூன்று வருடங்கள் இதற்காக பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு மார்க் தேவை என்றும், அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்துதான் மருத்துவ படிப்பு கிடைக்கும் என்ற அழுத்தத்தை நாம் தரக்கூடாது.

ஏழை எளிய மாணவர்கள் கடன் வாங்கிதான் படிக்கின்றனர். அப்படி படிக்கும்போது அத்தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் மூன்று லட்சம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது மாணவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் பாதிக்கிறது. என்றார் அமைச்சர்.

எத்தனையோ மாணவர்களை நாம் இழந்துள்ளோம். இதுபோன்ற சூழல் இனிமேல் வரக்கூடாது என்பதற்காக தான் இப்போராட்டம் என்றார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.