சட்டசபை கூட்டத்தில் பணிநிரந்தரம் பற்றி அறிவிக்க வேண்டும் – பகுதிநேர ஆசிாியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தொடா்பாக, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலே அரசு கொள்கை முடிவாக பணிநிரந்தரம் அறிவிக்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தல் :

திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் இந்த நான்கு ஆண்டாக போராடி வருகின்றார்கள்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110 ன் கீழ் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 26-8-2011 அன்று உடற்கல்வி ஓவியம் தொழிற்கல்வி போதிக்க அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கபட்டது.

இதை தொடர்ந்து இதற்காக பள்ளிக்கல்வித்துறையில 177 என்ற அரசாணை 11-11-2011 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி 2012 ஆம் ஆண்டில் பகுதிநேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பகுதி நேர ஆசிரியாகள் பணிநிரந்தரம்
பகுதி நேர ஆசிரியாகள் பணிநிரந்தரம்

அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் வலியுறுத்தியது.

அதிமுக ஆட்சியில் சம்பளத்தை படிப்படியாக உயர்த்தி கடைசியாக 10 ஆயிரம் ரூபாயாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் 2021 ஆம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுதேர்தல் நடந்தது.

தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என 181-வது வாக்குறுதியை கொடுத்தது. இதனால் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் இருந்து, இனி காலமுறை சம்பளத்திற்கு திமுக அரசு கொண்டு வந்துவிடும் என எதிர்பார்த்தோம். பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வலியுறுத்தினோம்.

திமுக தவிர அனைத்து கட்சிகளின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள். பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். ஆனாலும் பணிநிரந்தரம் செய்யவில்லை. இறுதியாக 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடத்தினோம்.

அந்த தொடர் போராட்டத்தின்போது தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 2,500 சம்பள உயர்வு மற்றும் 10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என இரண்டு அறிவிப்பை 4-10-2023 அன்று வெளியிடக் கேட்டு கொண்டார்.

ஆனால், இந்த சம்பளம் போதாது, தேர்தலில் சொன்ன வாக்குறுதிபடி வேலையை நிரந்தரம் செய்ய வேண்டும் என போராட்டத்தை தொடர்ந்தோம். இதனால் 5-10-2023 விடியல் காலையில் கைது செய்து போராட்டத்தை கலைத்து விட்டனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இரண்டு அறிவிப்பில் 2,500 ரூபாய் சம்பள உயர்வை மட்டுமே மூன்று மாதங்கள் கடந்த பின்னர் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசாணை வெளியிட்டு வழங்கப்பட்டது. மருத்துவ காப்பீடு 10 லட்சம் அறிவிப்பு குறித்து ஒரு தகவலுமே தெரியவில்லை. சம்பள உயர்வா கொடுத்த 2,500 ரூபாயை, ஏற்கனவே கிடைத்த 10 ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக 12,500 ரூபாயாக கொடுக்காமல் இதுவரை இரண்டு பரிவர்த்தனையாக பட்டுவாடா செய்யப்படுவதால் தாமதம் ஆகிறது. இது மனதளவில் பாதிக்கிறது.

மேலும் இந்த வேலைக்கு சேர்ந்தது முதல் இந்த 13 ஆண்டுகளாக மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்பட அரசின் பணப்பலன்களும் இதர சலுகைகளும் கிடைக்கவே இல்லை.

இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம். இறந்துபோன ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கவில்லை. ஓய்வு பெற்றவர்களுக்கும் பணிக்கொடை வழங்கவில்லை. இதனால்  4 ஆயிரம் பேர் பணிபிடங்கள் காலியாக உள்ளது.

இதனால் தற்போது 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். பகுதிநேர ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு இந்த வேலையை நிரந்தரம் செய்தால் மட்டுமே எஞ்சிய காலத்தை நல்லபடியாக வாழ முடியும்.

திமுக ஆட்சிக்கு வந்து 44 மாதங்கள் முடிந்துவிட்டது, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் முடிய போகிறது. இந்த ஐந்து ஆண்டு சட்டசபை காலத்தில் இன்னும் ஒரே ஒரு முழுமையான பட்ஜெட் மட்டுமே இருக்கிறது.

அதில் நிரந்தரம் செய்ய தேவையான நிதியை ஒதுக்கி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது ஆண்டுக்கு மே மாதம் தவிர்த்து 11 மாதங்களுக்கும் ₹12,500 தொகுப்பூதியத்திற்காக 160 கோடி ரூபாய் ஆகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிறப்பாசிரியர்கள் நிலையில் பணியமர்த்தி காலமுறை சம்பளமாக வழங்க ஆண்டுக்கு சுமார் 450 கோடி ஆகும். இதற்காக தற்போது ஆகும் 160 கோடியில் இருந்து, மேலும் 250 கோடியில் இருந்து ஒரு 300 கோடி தேவைப்படும்.

இதை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், 13 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்ப நலன் கருதியும், மனிதாபிமானம் கொண்டு முதல்வர் ஸ்டாலின் செய்ய வேண்டும்.

இந்த வேலைக்கு சேர்ந்ததுமுதல் இதுவரை பொங்கல் போனஸ் வழங்கவில்லை. இந்த முறையாவது பொங்கல் போனஸ் கிடைக்க செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும்.

அதுபோல அரசின் கொள்கை முடிவாக திமுக தேர்தல் வாக்குறுதி 181 ஐ அரசாணையாக்கி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இதை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலே செய்ய வேண்டும்.

 

—  பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.