அங்குசம் சேனலில் இணைய

விருதுநகர்- வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த ஊராட்சி செயலாளர்! லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆய்வு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றிய தங்கபாண்டியன் இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தியின் போது நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சொத்து சேர்த்ததாகவும்,

மேலும் இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறார், என்று கிராம சபை கூட்டத்தில் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் விவசாயி அம்மையப்பனை நெஞ்சில் காலால்  மிதித்து உதைத்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன்
ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன்

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தங்கபாண்டியனை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற சிறையில் அடைத்து பின்னர் ஜாமினில் வெளிவந்தார். ஊராட்சி செயலர் தங்கபாண்டியனும் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தங்கபாண்டியன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கானது நடைபெற்று வருகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில் தங்கபாண்டியனுக்கு சொந்தமான படிக்காசுவைத்தான்பட்டி  ஊராட்சியில் திருமண மஹால், வீடுகள் வாடகைக்கு விடப்படும் கடைகள்,  பிள்ளையார் குளம் ஊராட்சியில் உள்ள தங்கப்பாண்டியனுக்கு சொந்தமான விவசாய நிலங்கள்,தோப்புகள் உள்ளிட்ட இடங்களில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், மின்சாரத் துறையினர் அளவீடு பணிகள் செய்து சொத்து மதிப்பை ஆய்வு செய்து வருகின்றனர்.

தங்கப்பாண்டியனின் வருமானம் ஒரு மாதத்திற்கு எவ்வளவு வருடத்திற்கு எவ்வளவு மற்றும் அவருடைய செலவினங்கள் குறித்து திட்டமிடல் செய்யப்பட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணைகள் தொடங்கப்படும் என அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தனர்.

 

—   மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.