”மூதாட்டி கொலை” துரிதமாக செயல்பட்ட காவல்துறை – பொதுமக்கள் பாராட்டு!
மூதாட்டியை கொலை செய்த குற்றவாளிகளை 5 நாட்களுக்குள் கைது செய்த காவலர்களை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகள்….
மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கொலை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.
கடந்த 04.03.25-ம் தேதி மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், பெருங்குடி காவல் நிலைய சரகத்தில் ஈச்சனேரி சாலையின் வழியாக செல்லும் கால்வாயில் 60 வயது மதிக்கதக்க மூதாட்டி சந்தேகத்திற்கிடமான வகையில் கொலை செய்யப்பட்டு தலையில் பாலித்தீன் கவரால் சுற்றி, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் மேற்படி இடத்தில் போடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் பெருங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி காவல் நிலைய குற்ற எண் 32/25 U/s 103 BNS ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளபட்டு வந்தது. சமீபத்தில் காணமால் போனவர்கள் தொடர்பான வழக்குகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஆகியவை ஆராயப்பட்டது.
விசாரணையில் கடந்த 01.03.2025 அன்று அவனியாபுரம் காவல் நிலையத்தில் இந்திராணி 70, க/பெ.நடராஜன், வாசுகி தெரு, மீனாட்சி நகர் வில்லாபுரம் என்பவர் 20.02.25-லிருந்து காணவில்லை என்று அவருடைய தங்கை கிருஷ்ணவேணி 55, க/பெ.நாதன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் காவல் நிலைய குற்ற எண் 137/25 U/s. Woman missing ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது சம்பந்தமாக அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் சந்திரசேகரன் மற்றும் அவரது நண்பர் அமர்நாத் என்பவரை பெருங்குடி காவல் நிலையத்திற்கு 09.03.2025 அன்று அழைத்து வந்து விசாரணை செய்ததில் இருவரும் சேர்ந்து மேற்படி இந்திராணியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

சந்திரசேகரன் இறந்தவருக்கு வீடு வாடகைக்கு அமர்த்தி அடிக்கடி சிறு சிறு உதவிகள் சந்திரசேகரன் என்பவர் செய்து வந்துள்ளார். சந்திரசேகரன் என்பவர் தையல் வேலை பார்த்து வருகிறார். சரியான வருமானம் இல்லாததால் கடன் பிரச்சனையில் இருந்துள்ளார்.
இறந்தவரின் வீட்டிலிருந்து ஒரு தங்க மோதிரம் மற்றும் ஒரு தங்க கைச்செயின் ஆகியவற்றை சந்திரசேகரன் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து இந்திராணி சந்திரசேகரனை மேற்படி பொருள்களை திருப்பித் தந்து விடும்படி கூறியுள்ளார்.
சந்திரசேகரன் இது குறித்து பேச வேண்டும் என்று கூறி 20.02.2025 அன்று மேற்படி இந்திராணியை தனது வீட்டுக்கு அழைத்து, அங்கு வந்த இந்திராணியை சந்திரசேகரன் அவரது நண்பர் அமர்நாத் உதவியுடன் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம், வில்லாபுரம், மீனாட்சி நகர், சுபாஷ் தெரு, கதவு எண்: 72, கிருஸ்ணமூர்த்தி என்பவரது மகன் சந்திரசேகரன் (50) மற்றும் மதுரை மாவட்டம், கீரைத்துறை, புதுமாகாளிப்பட்டி ரோடு, சாராயக்கடை சந்து, கணேஷ்பாபு என்பவரது மகன் அமர்நாத்(38) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 10 சவரன் தங்கநகைகள் மற்றும் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு அவர்கள் நீதிமன்றகாவலுக்குஉட்படுத்தப்பட்டனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில் குற்றச்சம்பவம் தாக்கலான 5 நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை மீட்ட தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 61601 மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்எச்சரித்துள்ளார்கள்இச்செயலை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
— ஷாகுல், படங்கள்:ஆனந்தன்.