பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியில் தொழுநோய் எதிர்ப்பு தினம் .
உலக தொழுநோய் எதிர்ப்பு தினம் பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் 30.01.25 காலை 11.05 மணிக்கு முதன்மை மருத்துவர் அதிகாரி டாக்டர் .விஜயலட்சுமி ஏ நடராஜன் தலைமையில் நடைப்பெற்றது.
உடல்நலம் மற்றும் குடும்பநலன் / ரயில்வே மருத்துவனை ஸ்ரீ.டி.ரவி பவனசம் வரவேற்றார். ரயில்வே மருத்துவமனை தோல் டாக்டர் ஏ.தெரசல் வளர்மதி தொழுநோயின் வரலாறு, காரணங்கள் அறிகுறிகள், தொழுநோய்க்கான சிகிச்சை, தொழுநோயின் தவிர்ப்பது பற்றி விரிவுரை வழங்கினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நிகழ்வில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அனைத்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.