அரசியல் படத்தில் அரசியல் பேசல”– குழப்பியடித்த டைரக்டர் !
அரசியல் படத்தில் அரசியல் பேசல”– குழப்பியடித்த டைரக்டர் ! Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘அறம் செய்’. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது ‘அறம் செய்’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் பேசியோர்… நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியது, “இயக்குநர் பாலு வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார், நான் Youtube ல், பேசுவது பற்றித் தெரியுமா என கேட்டேன், தெரியும் சார், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார். மகிழ்ச்சி என்றேன். இந்தப்படம் கண்டிப்பாகச் சர்ச்சையில் சிக்குமெனத் தெரியும். முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மை சம்பவங்களை எடுத்திருக்கிறார். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு”.
திருச்சி சாதனா பேசியது… ‘எனக்கு மிக சந்தோசமாக இருக்கிறது. அரசியல் சம்பந்தமான ஒரு படத்தைத் துணிந்து மிகத் தைரியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். இயக்குநர் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசச் சொன்னார் .ஆனால் மற்ற எல்லாத்தையும் பேசி பிரச்சனையாகி விடும் போல் தெரிகிறது. இந்தப்படத்தில் நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேரக்டரில் நடித்திருக்கிறேன். இப்போதைக்கு இதை மட்டும் தான் சொல்ல முடியும்”.
நடிகை மேகாலி மீனாட்சி, “இந்தப்படம், மிக இனிமையான அனுபவம். படத்தில் மிக நல்லதொரு கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர் பாலு சார் மிக எனர்ஜி ஆனவர். படத்தை மிகச் சிறப்பாக எடுத்துள்ளார்.படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது”.
நடிகை அஞ்சனா கீர்த்தி பேசும் போது, “இந்தப் படத்தில் எனக்கு மிக அழுத்தமான கேரக்டர். இயக்குநர் மிக அற்புதமாகப் படத்தை எடுத்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
நடிகர் ஜீவா பேசியதாவது “பாலு வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகன் இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். மிக இளகிய மனதுக்காரர்.மேகாலி மிகத் திறமையான நடிகை, அஞ்சனா கீர்த்தி, அவரும் நன்றாக நடித்துள்ளார். ஜாக்குவார் தங்கம் மிகச் சர்ச்சையான வசனங்கள் பேசி நடித்துள்ளார்”.
ஜாக்குவார் தங்கம் பேசியதாவது.”படம் மிக மிக நல்ல கருத்தைச் சொல்லும் படமாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத்தாருங்கள்”.
இயக்குநர் நடிகர் பாலு எஸ். வைத்தியநாதன் பேசும்போது, “இந்தப் படம் அரசியல் படம் தான். ஆனால் நாங்கள் பேசவில்லை. நமக்குத் தேவை ஆட்சி மாற்றம் இல்லை, முழுமையான அரசியல் மாற்றம். இதுதான் இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தில் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளையும், தனிநபர்களையும் அரசியல் கட்சியையும் தாக்கி பேசவில்லை, எந்த ஒரு தனி நபரையும் தாக்கி காட்சிகள் வைக்கவில்லை, அப்புறம் எப்படி இது அரசியல் படம் என நீங்கள் கேட்கலாம்.
74 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்த, அரசியல் கட்சிகள் மக்களுக்கு எதிராகச் செய்த செயல்களை இப்படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். அதனால் தான் இது அரசியல் படம். இந்திய அரசியல் சாசனப்படி மக்கள் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.