அரசு விழாவில் ஏரியா சீனியர் திமுக எம்.எல்.ஏ. ஆப்சென்ட் ! அமைச்சருடன் மனவருத்தமா ?

மக்கள் ஆதரவு இல்லாமலா, நாலுவாட்டியும் ஜெயிச்சாரு? எனக்குத் தெரிந்து கட்சிக்காரன்

0

அரசு விழாவில் ஏரியா சீனியர் திமுக  எம்.எல்.ஏ. ஆப்சென்ட் ! அமைச்சருடன் மனவருத்தமா ?

இலால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன். ஆக-14 அன்று அவரது தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊரான காணக்கிளியநல்லூர் ஆகியவற்றில் நடைபெற்ற அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அரசு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

https://businesstrichy.com/the-royal-mahal/

அமைச்சர் கே.என்.நேரு சொந்த ஊரில்

உள்ளூரில் இருந்து கொண்டே, அதுவும் அதிகபட்சம் 10 கிலோமீட்டர் இடைவெளியில் இருந் துகொண்டே அரசு விழாவில் பங்கேற்காமல் ஏன் புறக்கணிக்க வேண்டும்? எம்.எல்.ஏ.விடமே விளக்கம் கேட்டோம். ”பங்கேற்கவில்லை, அவ்வளவுதான். இதற்கு மேல் பேச விரும்பவில்லை. அது அரசியல் நாகரீகமாகவும் இருக்காது.” என்ற ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார். எம்.எல்.ஏ.வுக்கு என்னதான் பிரச்சினை? கழக உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். கட்சியிலிருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகவும், எம்.எல்.ஏ.வுக்கான மரியாதை வழங்கப்படாததுமே புறக்கணிப்புக்கான காரணம் என சொல்கிறார்கள் ஒரு தரப்பினர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இலால்குடி சட்டமன்றத் தொகுதியில், தொடர்ந்து நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார். அதிமுக ஆட்சியை கைப்பற்றியபோதும், இவர் இந்த தொகுதியில் வென்று காட்டியவர். போட்டியிட்ட நான்கு முறையும் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆகியிருந்தபோதும், இது வரை ஒருமுறைகூட அமைச்சர் பதவி வழங்காததும் வருத்தம் தான் என்கிறார்கள். ”நீங்க ஏன் அமைச்சர் பதவி வரைக்கும் போறீங்க?”, இது வரைக்கும் இருந்த கட்சிப் பதவியையும் பிடுங்கிட்டுல்ல விட்டுருக்காங்க, அதுதான் வருத்தம் என்கிறார் மற்றொருவர்.

அ. சௌந்தரபாண்டியன்
அ. சௌந்தரபாண்டியன்

அவர், முதல் முறையாக இலால்குடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, கட்சியில் புள்ளம்பாடி ஒன்றிய செயலாளராக இருந்தவர். எம்.எல்.ஏ. ஆன பிறகு, பொதுக்குழு உறுப்பினர் பதவியும் கிடைத்தது. இப்போது, அவரிடமிருந்த பொதுக்குழு உறுப்பினர் பதவியையும் பறித்துவிட்டார்கள், அதுதான் பிரச்சினை என்கிறார்கள்.

மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்தது உண்மைதான். ஆனால், அதுவும் கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, நீருபூத்த நெருப்பு போல சின்ன சின்ன மனக்கசப்புகளுடன்தான் இந்த பிரச்சினை இருந்து வந்தது. இப்போது, வெளிப்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ. தன்னிடம் பட்டும் படாமலும் இருக்கிறார் என்பதை உணர்ந்து தான, இலால்குடி சட்டமன்ற தொகுதி தன் கையை விட்டு சென்றுவிடக்கூடாது என்பதற்காக, தனது நம்பிக்கைக்குரியவரான வைரமணி என்பவரை தற்போது திருச்சி மத்திய மாவட்ட செயலாளராக கொண்டு வந்திருக்கிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வைரமணி திமுக.மா.செ.
வைரமணி திமுக.மா.செ.

அதுவும், பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் மாவட்ட செயலாளர்கள் மாற்றத்தில் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் மாற்றம் கண்டிப்பாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் உடன்பிறப்புக்கள். கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை மத்திய மாவட்ட செயலாளராக கொண்டுவருவது என்பது அவரது திட்டமாம். கே.என்.நேரு மகனுக்காக மாவட்ட செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்கும் வைரமணிக்கு, அவரது மகனுக்கு ஒன்றிய அளவில் ஏதேனும் புதிய பொறுப்பை கொடுப்பது என்பதாக ஏற்பாடு என்கிறார்கள்.

அருண் நேரு
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் – அருண் நேரு – கே.என்.நேரு 

”வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகிட்டிருந்தா பொறுப்பும் பதவியும் வீடு தேடி வந்துருமா?” என எதிர்கேள்வி கேட்கிறார்கள் இன்னொரு தரப்பு உடன்பிறப்புகள். நான்குமுறை எம்.எல்.ஏ. ஆனதெல்லாம் சரிதான். இந்த 20 வருசத்துல அமைச்சருக்கு (கே.என்.நேரு) சொந்தமான பெட்ரோல் பங்க்; இலால்குடி கட்சி ஆபீச தாண்டி வெளிய வந்திருக்காரா? எனக்குத் தெரிஞ்சி தமிழகத்திலேயே சட்டமன்ற உறுப்பினருக்கென்று தனி அலுவலகம் வைத்துக்கொள்ளாத ஒரே எம்.எல்.ஏ. இவர் ஒருவராகத்தான் இருப்பார். அமைச்சரோட பெட்ரோல் பங்கிலும், கட்சி ஆபிசிலும் உட்கார்ந்து இருந்தா மாற்று கட்சி காரன் மரியாதை நிமித்தமாககூட சந்திக்க கிட்ட வருவானா? இல்லை பொதுஜனங்கள்தான் வருவார்களா? காலம்போன கடைசியில, இப்போதான் கல்லக்குடியிலும், இலால்குடியிலும் புதுசா கட்சி ஆபிச திறந்திருக்காரு. என்கிறார்கள்.

அடுத்து, கட்சி நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சி, நன்கொடைனு போனா காசெல்லாம் எங்கிட்ட எங்கப்பா இருக்கு?னு சலிப்பா சொல்லி அனுப்பிடறாரு. கட்சி விளம்பரம் கொடுக்கனும்னா காசு இல்லைனு சொல்லிடறாரு. அப்புறம் எப்படி? என எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

கே.என்.நேரு  - அரசியலின் ரகசியமும் எதிர்காலத்தின் அவசியமும்
அமைச்சர் கே.என்.நேரு  – 

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மக்கள் ஆதரவு இல்லாமலா, நாலுவாட்டியும் ஜெயிச்சாரு? எனக்குத் தெரிந்து கட்சிக்காரன் கல்யாணம் காட்சினு வீடு தேடி பத்திரிக்கை வச்சிட்டா போதும். ஒரே நாளில் பத்து கல்யாணம் இருந்தாலும், சும்மா வந்து தலையையாவது காட்டிவிட்டு போயிடுவார். சொந்தக்காரனை தாண்டி, கட்சி, காண்டிராக்ட்ல பழக்கமானவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னாகூட, ஆஸ்பத்திரியில வந்து பார்த்துட்டு நலம் விசாரிச்சிட்டு போவாரு. முக்கியமா, பெரிய காரியமா இருந்தாலும் பாகுபாடு காட்டாம ஒரு எட்டு வந்துட்டுதான் போவாரு. யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத நல்ல மனுசன் என்கிறார்கள் அடிமட்ட தொண்டர்கள்.

நாலுமுறை எம்.எல்.ஏ.வாக ஜெயிச்ச இந்த இருபது வருட அவருடைய அரசியல் வாழ்வில் அவர் பெயர் சொல்லும்படி எவ்வளவு செய்தார் என்று பட்டியலிடுவதைவிட, ”யாருக்கும் கெடுதல் செய்யாத நல்ல மனிதர்” என்ற முத்திரைதான் ஓட்டாக விழுந்திருக்கிறது போல !

– ஆதிரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.