உலகத்தின் தலைசிறந்த மருத்துவர்கள் எல்லாம் நீட் தேர்வு எழுதாத பல இந்திய மருத்துவர்கள் தான் .
“நீட் தேர்வு எழுதாமல் மருத்துவரானவர்கள் அறிவு ஊனம் கொண்டவர்கள்” ஆளுனர் ஆணவ ரவியின் அகம்பாவப் பேச்சு
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்களுடன் 12.8.2023 அன்று ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆளுனர் ரவியை நோக்கி அம்மாச்சியப்பன் ராமசாமி என்பவர் நீட் தேர்வு ஒழிப்புக்கான மசோதாவில் எப்பொழுது கையெழுத்து இடுவீர்கள் ?? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.
நீட் மசோதாவில் நான் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன், அதை குடியரசு தலைவர் வேண்டுமானால் சட்டமாக்கலாம் ஆனால் அதற்க்கு ஒருபோதும் என்னுடைய ஆதரவு இருக்காது. அதை ஆதரிக்கும் கடைசி மனிதனாகவே நான் இருப்பேன் என்று கூறியுள்ளார் ##
வருங்கால தலைமுறை அறிவு ஊனமுற்றவர்களாய் ஆவதை நான் விரும்பவில்லை என்று ஆணவத்துடன் பேசி உள்ளார் 😡😡
அதற்க்கு ராமசாமி ஆளுனரிடம் இதற்க்கு முன்னால் மருத்துவதுறையில் சாதித்தவர்கள் எல்லாம் அறிவு ஊனமுற்றவர்களா ?? என்று கேட்டதற்க்கு ஆளுனர் அந்த சாதனைகள் எதிர்காலத்திற்க்கு போதாது என்று திமிர் பேச்சு பேசியது கண்டத்துக்கு உரியது.
இந்தியர்களின் சராசரி வயது 50 லிருந்து படிப்படியாக உயர்ந்து இப்பொழுது 70 வயதை அடைந்ததுக்கு முக்கியகாரணம் மருத்துவதுறையின் சாதனைதான் . நீட் தேர்வு எழுதாத மருத்துவர்களின் அறிவும் உழைப்பும் அதில் உள்ளது.
72 வயது ஆளுனர் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இவ்வளவு ஆணவத்துடன் உரையாற்றுவதற்க்கு பின்னால் நீட் தேர்வு எழுதாத பல மருத்துவர்களின் அறிவும் உழைப்பும் உள்ளது.


உலகத்தின் தலைசிறந்த மருத்துவர்கள் எல்லாம் நீட் தேர்வு எழுதாத பல இந்திய மருத்துவர்கள்தான் . அதிலும் தமிழ்நாடு தான் மெடிக்கல் கஃப் ஆக பார்க்கபடுகிறது.
மத்தியில் தங்களுடைய ஆட்சி இருப்பதற்க்காக எதை வேண்டுமானலும் பேசலாம் யாரை வேண்டுமானலும் தரம் குறைவாக நடத்தலாம் என்று நினைக்கும் ஆளுனர் ரவி பதவி விலக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
பாஜக வினர் பெரும்பாலும் உடல் நலத்துடன் இருப்பதுபோல் மனநலத்துடன் இல்லை என்பதுதான் ஒரு மருத்துவராக எனது கணிப்பு. விருதுநகரில் அண்ணாமலை பேசியது அவர் அரைகுறை என்பது உறுதியாகி விட்டது ##
பக்கத்து வீட்டில் தானே நெருப்பு என்று வேடிக்கைப்பார்பவர்களுக்கு எச்சரிக்கிறேன் அந்த நெருப்பு உங்கள் வீட்டுற்க்கு வருவதற்க்கு வெகு நாட்கள் இல்லை 😡😡
கடந்த ஒரு வருடமாக மதிமுக வின் முதன்மை செயலாளர் அண்ணன் துரைவைகோ அவர்கள் ஆளுனர் நடவடிக்கை சரியில்லை என்று சொல்லி வந்தது முற்றிலும் உண்மை ஆகிவிட்டது .
பொது மக்களிடம் ஆளுனரை பதவி நீக்க ஒரு கோடி கையெழுத்தை பெற்று இருக்கிறோம் ,விரைவில் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க இருக்கிறோம் ##
டாக்டர் .ரொஹையா சேக்முகமது MDDGO
துணைப்பொது செயலாளர் ##. மதிமுக
