அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அர்ஜுன் தாஸ் & அதிதி ஷங்கர் ஜோடி யின் புதுப்படம் ஆரம்பம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

அர்ஜுன் தாஸ் & அதிதி ஷங்கர் ஜோடி யின் புதுப்படம் ஆரம்பம் !  – தமிழ்த் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 11- ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் கமிட்டாகி யுள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Arjun Das - Aditi Shankar
Arjun Das – Aditi Shankar

ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். முழு நீள பொழுதுபோக்கிற்கு கியாரண்டி தரும் இந்த ப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

https://www.livyashree.com/

ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து, தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து, திரையுலக வணிகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றிருக்கும் தயாரிப்பாளரும், தன்னுடைய காந்த குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கும் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைவதாலும், இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.