சுசீந்திரனின் ‘2K லவ் ஸ்டோரி ‘ ஆரம்பம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சுசீந்திரனின் ‘2K லவ் ஸ்டோரி ‘ ஆரம்பம் ! –  City light Pictures தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘2K லவ்ஸ்டோரி ‘. இப்படத்தின் படப்பிடிப்பு நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொள்ள எளிமையான முறையில் பூஜையுடன் ஜூலை 10-ஆம் தேதி இனிதே துவங்கியது.

இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்குகிறார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

2K லவ்ஸ்டோரி
2K லவ்ஸ்டோரி

வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் சில இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்புகோவை மற்றும் சென்னையில் நடக்கவுள்ளது.

டி .இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன்& டி. இமான் இணையும் 10 வது படம் இது. சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.

புதுமுகம் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தொழில் நுட்பக் குழு :

இயக்கம் – சுசீந்திரன்
ஒளிப்பதிவு -V.S.ஆனந்த கிருஷ்ணன்
இசை – டி.இமான்
பாடல்கள் – கார்த்திக் நேதா
எடிட்டர் – தியாகு
கலை – சுரேஷ் பழனிவேலு
நடனம் – ஷோபி, பால்ராஜ்
பி.ஆர்.ஓ – சதீஷ் (AIM)
ஆடை வடிவமைப்பாளர் – மீரா
போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.