அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

”ஹீரோயினிடம் பேசுவது சிரமம்” – ’அந்தரன்’ டைரக்டர் சொன்னது!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

‘ஸ்ரீகிரிஷ் பிக்சர்ஸ்’ பேனரில் மு.கி.சாம்பசிவம் தயாரித்து வரும் 25-ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘அந்தரன்’. சந்தோஷ் ராவணன் டைரக்‌ஷனில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், அருவி பாலா, ஐஸ்வர்யா கண்ணன், தயாரிப்பாளர் சாம்பசிவம் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : கிஷோர் ராமச்சந்திரன், இசை : ஹரி எஸ்.ஆர்., எடிட்டிங் : இக்னேஷியஸ் & அஸ்வின், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.

25-ஆம் தேதி ரிலீசாவதால் படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா இருநாட்களுக்கு முன்பு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சி.வி.குமார், பிக்பாஸ் சபரி, ‘விக்கல்ஸ்’ விக்ரம்,  நடிகை சாண்ட்ரா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

“இப்படம் ரிலீசுக்குப் பிறகு பிரஜினின் சினிமா கேரியர் நல்ல நிலைமைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை” என்றார் விக்கல்ஸ் விக்ரம்.

ஹீரோயின் இவானா வருண், “இது எனக்கு முதல் படம். ரசிகர்களும் மீடியாக்களும் ஆதரவு தர வேண்டும்”.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

HARINI JEWELLERS TRICHY

’அந்தரன்’டைரக்டர் சந்தோஷ் ராவணன், “அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என்று அர்த்தம். இதன் தயாரிப்பாளர் சாம்பசிவம் சார், அவருடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவரின் பேராதரவு தான் இப்படம் உருவாகக் காரணம். இப்போது நீதிமன்றத்தில் நடந்து வரும் ஒரு வழக்கினை அடிப்படையாக வைத்து இதன் கதையை எழுதியுள்ளேன். அது என்ன வழக்கு? யாருடைய வழக்கு? என்பதை தயாரிப்பாளரிடம் கூட சொல்லவில்லை. பட வெற்றிக்குப் பின் சொல்கிறேன். வழக்கமான படமாக இது இருக்காது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். ஹீரோ பிரஜினின் உழைப்பு மிகவும் அபாரம். என்ன ஒண்ணு ஹீரோயின் இவனாவுடன் பேசுவது தான் ரொம்ப சிரமம்., ஏன்னா அவருக்கு இந்தி மட்டும் தான் தெரியும். நான் பேசும் ஆங்கிலம் அவருக்குப் புரியாது. இதற்கு ஒரு டிரான்சிலேட்டரை வச்சுதான் அவரிடம் பேசினேன்”.

சி.வி.குமார், “இப்படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவம் 2019-ல் அடவி என்ற படத்தைத் தயாரித்து அதை ரிலீஸ் பண்ணுவதற்காக என் உதவியை நாடினார். அதன் பின் மனிதர்கள் என்ற படத்தையும் ரிலீஸ் பண்ண வேண்டினார். நான் தான் அது தியேட்டருக்குரிய கமர்ஷியல் படம் அல்ல, ஆர்ட் பிலிம். எனவே ஃபெஸ்டிவெல்லுக்கு அனுப்பலாம் எனச் சொல்லி அதன்படி அனுப்பினார். இந்த அந்தரன் கதையின் போக்கை யாராலும் கணிக்க முடியாது. அவ்வளவு ட்விஸ்டாக போகும்”.

ஹீரோ பிரஜின், “இருபது வருடமாக சினிமாவில் நல்ல வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். இந்த அந்தரன் அதற்கான விடை சொல்லும் என்று நம்புகிறேன்.

—   ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.