அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘பெத்தி’    

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் & விருத்தி சினிமாஸ் வெங்கட சதீஷ் கிலாரு. டைரக்டர் : புச்சிபாபு சனா, ஆர்டிஸ்ட் : ராம் சரண், ஜான்வி கபூர், ஷிவராஜ்குமார், ஜெகபதி பாபு, விஜி சந்திரசேகர்,  திவ்யேந்து சர்மா, ஜான்விஜய், மொம்மன் இரானி, ஒளிப்பதிவு : ஆர்.ரத்னவேலு, இசை : ஏ.ஆர்.ரஹ்மான், எடிட்டிங் : நவீன் நூலி, தயாரிப்பு வடிமைப்பாளர் : அவினாஷ் கொல்லா, பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

பெத்தி1990-களில் ஆந்திராவின் மலைகிராம் தான் கதைக்களம். அங்கே கரும்பாலை ஒன்றில் கூலித் தொழிலாளியாக இருக்கும் பெத்தி[ராம் சரண்] உள்ளூர் கிரிக்கெட்டிலும் மாபரும் வீரன். இதனால் அங்கே கிரிக்கெட் அணிகளை ஏலம் எடுக்கும் பெரும்புள்ளிகள், பெத்தியை ஆட்டக் கூலியாக அமர்த்தி ஜெயிக்கிறார்கள். கரும்பாலையில் ஒரு மாதம் வேலை பார்த்துவிட்டு தங்களது கிராமத்திற்கு கரடுமுரடனான பாதைகளில் நடந்தே செல்கிறார்கள் பெத்தியும் அந்த ஊர் மக்களும். அந்த மக்களுக்கென்று எந்த அடையாளமும் இல்லாததால் அரசாங்கத்தின் திட்டங்களும் அவ்வூருக்கு வருவதில்லை, ஓட்டுப்போடவும் அவர்களுக்கு உரிமையும் இல்லை. இவ்வளவு ஏன் அந்த மலைகிராமத்தையொட்டிச் செல்லும் ரயில் கூட அங்கே நிற்பதில்லை. அங்கே ரயிலை நிறுத்துவதற்காகவும் அரசாங்கத்தின் பலன்கள் கிடைப்பதற்காகவும் போராடுகிறார் ஜெகபதி பாபு. அந்த மக்களுக்கு அடையாளம் கிடைத்ததா? அரசாங்கத்தின் கருணைப் பார்வைபட்டதா? இதற்காக பெத்தி சந்திக்கும் சவால்களும் சாதனைகளும் தான் படத்தின் கதை.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

பெத்திஅக்மார்க் தெலுங்குப்படம் என்பதால் தமிழில் கொண்டு வந்து தமிழ் ரசிகர்களைக் கவர வேண்டும்  என்பதற்காக சில டகால்டி வேலைகளைப் பண்ணியிருக்கிறார்கள். ஆனால் எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை. என்னதான் தமிழ் எழுத்துக்கள், வசனங்களைப் பேசினாலும் தெலுங்கு முகத்தை புச்சிபாபு சனாவால் மறைக்கவே முடியவில்லை.

சாதி ஆதிக்கமும் பணத்திமிரும் ஒன்று சேர்ந்து ஒதுக்கியதால் மல்யுத்த வாத்தியார் ஷிவராஜ்குமாரிடம் சேர்ந்து மல்யுத்தப் பயிற்சிப் பெறுகிறார் ராம்சரண். அந்த விளையாட்டிலும் தேசிய சாம்பியானாகும் முயற்சியிலும் தோற்றுப் போகிறார். இதற்குக் காரணம் கூடவே இருந்து குழிபறித்த [ காலை உடைத்து] கயவனின் வேலை எனத் தெரிகிறது ராம் சரணுக்கு. அப்போதும் அவருக்கான அடையாளம் கிடைக்கவில்லை. அதன் பின் ராம்சரண் எடுக்கும் பகீர் முடிவு தான், அதிலும் க்ளைமாக்ஸில் விளையாட்டு மைதானத்தில் அவர் பேசும் பேச்சு தான் ‘பெத்தி’யின் பெரும்பலம். மூணு மணி நேரம் படம் ஓடுவது பெரும்பலவீனம். அதிலும் இடைவேளை வரை ஜவ்வாகப் போட்டு இழுக்கிறார்கள்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

HARINI JEWELLERS TRICHY

பெத்திமல்யுத்த வீரனாக உண்மையிலேயே ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார் ராம்சரண். சிக்ஸ் பேக்கா? எயிட் பேக்கா? என்கிற அளவுக்கு அவரது உடல்கட்டு செம கட்டுமஸ்தாக இருக்கிறது. ‘மெகா பவர் ஸ்டார்’ பட்டம் அவருக்குப் பொருத்தமானது தான். மூணு மணி நேரப்படத்தில் மொத்தமே பதினைந்து நிமிடங்கள் தான் ஜான்விகபூருக்கு. அந்த பதினைந்து நிமிடங்களில் செம தூக்கலான கவர்ச்சி ட்ரீட் கொடுத்திருக்கிறார். ஒரு குத்தாட்டத்துக்கு வருகிறார் ஸ்ருதி ஹாசன். கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவராஜ்குமாரின் எண்ட்ரிக்குப் பின் கொஞ்சம் வேகமெடுக்கிறான் இந்த ‘பெத்தி’.  ராம் சரணின் அம்மாவாக விஜி சந்திரசேகர், கரும்பாலை ஓனராக, வழக்கம் போல் அரைலூசாக ஜான்விஜய் வருகிறார்கள்.

இந்த பெத்தியில் பிரமிக்க வைத்த இருவர் கேமராமேன் ஆர்.ரத்னவேலுவும் தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லாவும் தான். அந்த மலைகிராமப்பகுதி, ரயில் இதெல்லாம் செட்டா? இல்ல நிஜமான்ற அளவுக்கு இருக்கு அவினாஷ் கொல்லாவின் உழைப்பு. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை சில இடங்களில் சீன்களின் டெம்போவை ஏற்றுகிறது.

‘பெத்தி’ முக்கால்வாசி ஜவ்வு, கால்வாசி ஜிவ்வு.

அங்குசம் பார்வையில் ‘பெத்தி’    41/100

 

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.