எனக்கு எப்போதும் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் Zee தமிழ் சரி கம ப அதை மாற்றியிருக்கிறது….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Zee தமிழ் சரி கம ப. – இசை ரியலிட்டி ஷோக்கள் மீது எனக்கு எப்போதும் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் சரி கம ப டீம் அதை மாற்றியிருக்கிறது. Reels இல் வரும் சில க்ளிப்பிங்குகளைப் பார்த்துவிட்டு முழு பாடலையும் போய் யூடியூபில் பார்க்க ஆரம்பித்தேன்.
பிறகு அந்த நிகழ்ச்சிக்காகவே Zee5 subscription வாங்கி பார்க்கத் தொடங்கினேன். ஒரு வணிக நிகழ்ச்சியின் ஒவ்வொரு பக்கத்திற்காகவும் உழைக்கிறார்கள். ஒவ்வொரு எபிசோடையும் உருவாக்க அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் உழைப்பும் வியக்க வைக்கிறது.
பாடகர்களை தேர்ந்தெடுத்த விதம், அதிலிருந்த பன்முகத்தன்மை, அவர்களின் பின்புலத்தை கண்ணியம் குறையாமல் அணுகிய விதம், புதியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் Professionalism, எப்படி வந்தாலும் பங்கேற்பாளர்களை மெருகேற்றும் நிகழ்ச்சியின் போக்கு, பங்கேற்பாளர்களின் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி இணைக்கும் வடிவம் என ஒவ்வொன்றும் சிறப்பு. GRP புள்ளிகள், தொலைக்காட்சி வருமானம் தாண்டி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் தமிழ்நாடு பற்றிய புரிதல் இருக்கிறது.  தேர்ந்த முதிர்ச்சியான அணுகுமுறை.
வீரபாண்டி என்று ஒரு ஆட்டோ ஓட்டுநர்
வீரபாண்டி என்று ஒரு ஆட்டோ ஓட்டுநர்

Sri Kumaran Mini HAll Trichy

நடுவர்கள் விஜய் பிரகாஷ், ஶ்ரீனிவாஸ், கார்த்தி, சைந்தவி, அபிராமி இளம் பாடகர்களை அணுகும்விதம் உற்சாகமாக இருக்கிறது. நடுவர்களின் Approach ல் கூட வரவேற்க வேண்டிய தன்மை இருக்கிறது. கூடவே உற்சாகமான திறமையான Music Band குழுவினர். Such a great Combo. நிகழ்ச்சி இயக்குநர் யாரென்று தெரியவில்லை. பின்னுகிறார்.
நிறைய சொல்லலாம். ஒரு சின்ன உதாரணம்.  வீரபாண்டி என்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் போட்டியில் இருக்கிறார். அவருடைய ஆட்டோவுக்கான கடனை அடைக்க ஒரு எபிசோடில் உதவினார்கள். ரியலிட்டி ஷோவில் இது ஒன்றும் புதிதில்லை.
இன்னொரு எபிசோடில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ விற்பனை டீலர் ஒருவர் வீரபாண்டிக்கு புதிய ஆட்டோ ஒன்றையே பரிசாக வழங்கினார்கள்.  இதுவும் கூட புதிதில்லை. ஆட்டோ டிரைவர் கடைசி வரை ஆட்டோவே ஓட்டணுமா என எனக்கு அப்போது கடுப்பானது. அடுத்த 5 நிமிடத்தில் அந்த எண்ணத்தை மாற்றியது சரி கம ப.

Flats in Trichy for Sale

நடுவர் பாடகர் ஶ்ரீனிவாஸ் சொல்லுவார், ‘பாஸ்போர்ட் ரெடி பண்ணுங்க வீரபாண்டி உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது’ இறுதியில் தொகுப்பாளர் அர்ச்சனாவை ஒரு விசயத்தை மேடையில் சொல்ல வைத்திருப்பார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

‘இந்த ஆட்டோ நீங்கள் ஓட்டுவதற்காக இல்லை; இதற்கு முதலாளி நீங்கள், இந்த ஆட்டோ உங்கள் பெயரில் வாடகைக்கு ஓடட்டும். நீங்கள் பாடகராக உலகை வலம் வரப் போகிறீர்கள்’
சமூகப் பார்வையோடு இயங்கும் இந்தப் புரிதலுக்காகவும், தமிழ்நாடு மண்ணின் மைந்தர்களை அறிமுகப்படுத்தியும், தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை தொடர்ந்து கொடுத்து வருவதற்காகவும் சரி கம ப குழுவிற்கும் Zee தமிழுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்❤️

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.