அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

300-ஆவது பட விழாவில் யோகி பாபு உருக்கமிகு பேச்சு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘தேவ் சினிமாஸ்’ எஸ். கிருத்திகா தங்கபாண்டி & டி. தங்கபாண்டி தயாரித்து வரும் 17- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது ‘அர்ஜுனன் பேர் பத்து ‘. யோகி பாபுவின்   300 ஆவது படம் என்ற சிறப்புடன் அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் டைரக்ட் பண்ணியுள்ளார்.

யோகி பாபுவுடன் அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி , எம் சௌந்தர்யா சரவணன் , ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இசை : டி .இமான் ஒளிப்பதிவு: பிரதீப் காளிராஜா எடிட்டிங்: மு. காசி விஸ்வநாதன் பாடல்கள்: கார்த்திக் நேத்தா வசனம்: எம் .ஆர் . அருண் சந்தர், கலை இயக்குனர்: பி. சேகர் ஸ்டண்ட் ;ஓம் பிரகாஷ் , பிஆர்ஓ: ஏ.ராஜா.

‘அர்ஜுனன் பேர் பத்து’ டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை 08-ஆம் தேதி நடந்தது..

யாவரும் கேளீர்

இதில் யோகி பாபு பேசியது….

“இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்  தங்கபாண்டி சார், கீர்த்திகா மேடம், இயக்குநர் ராஜ்மோகன் உங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி.

இது எனது 300 ஆவது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது.

எனவே 300 என்ற எண் எனக்குப் போதாது.ஒரு நடிகராக இருந்து கொண்டு நாமே ஒரு எண்ணிக்கை போட்டுப் பெருமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த எண்ணிக்கையைக் கடைசி காலத்தில் தான் சொல்ல வேண்டும்.

நாகேஷ் சார், மனோரமா அம்மா போன்ற ஜாம்பவான்கள் நடித்த படங்களின் எண்ணிக்கையைப் போல் நானும் நிறைய படங்கள் நடித்துப் பெரிதாக வளர வேண்டும். அந்த அளவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தில் நான் அழுவது போல் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

ஆற்காடு பக்கத்தில் ஒரு கிராமம் தான் எங்கள் தாத்தாவோட பூர்வீகம். நாங்கள் பிறந்ததெல்லாம்  சென்னைதான்.வெளியூரிலிருந்து வந்தவர்களுக்குத் தான் சினிமா கஷ்டம் என்று கிடையாது .சென்னையில் பிறந்தவர்களுக்கும்  சினிமா கஷ்டம் தான்.

சென்னை வாசிதான் நாங்க எல்லாமே. நான் அதை  இந்த 24 வருஷம் அனுபவப்பட்டுத் தெரிந்திருக்கிறேன்.

2009-ல் வந்த ‘யோகி’படம் தான் உங்களுக்குத் தெரியும். அதுக்கு முன்னாடி நான் லொள்ளுசபா போல எல்லா சேனலிலும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறேன்.எல்லார் கூடவும் பணியாற்றி இருக்கிறேன் ஆர்ட் டைரக்டரிடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளேன் .இப்படி நிறைய வேலை பார்த்திருக்கிறேன். நாம் வளர வேண்டும் என்றால் அதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும். அவை யாவும் என்னுடைய வளர்ச்சிக்கு நான் செய்தவை தான்.

இந்த ராஜ்மோகன் பற்றி இங்கே சொல்ல வேண்டும்.

ஒரு நாள் ராஜ்மோகன் என்னிடம் வந்து ஒரு  கதை சொன்னான்.அதன் பிறகு ஆளே காணோம். கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டான்.மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் என் அலுவலகத்தில் இருக்கும்போது ராஜ்மோகன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நினைவுவந்தது. உடனே அவனுக்குப் போன் செஞ்சு என்ன செய்ற என கேட்டப்ப வேன் ஓட்டுறேன்னுசொன்னான். உடனே வா படம் பண்ணலாம் என்று அழைத்தேன்.அப்படித்தான் இந்த படம் ஆரம்பித்தோம்.இது மாதிரி நிறைய உதவி இயக்குநர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் .நல்ல கதையோடு வாருங்கள்.சரியாகச் செய்யுங்கள்.

நான் எந்த பிரேமில் தலை காட்டினாலும் என்னை ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் பார்க்கிறார்கள்.நகைச்சுவை வேடங்கள் தான் எனக்குச் சோறு போடுகிறது. அதை முதலில் நான் திருப்தி செய்ய வேண்டும்.அதனால் அதை நிறுத்த மாட்டேன்.சில படங்களில் லீடு என்று முன்னணிப் பாத்திரங்களில் என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.மற்றபடி நான் ஒரு நகைச்சுவை நடிகராகத் தான் என் காலத்தை ஓட்டுகிறேன்.என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி”.

முதலில் தயாரிப்பாளர் தங்கப்பாண்டி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

300 ஆவது படத்தை  முன்னிட்டு  யோகிபாபுவுக்குத் தயாரிப்பாளர் ஆளுயர மாலை அணிவித்து   கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

 —   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.