சூர்யா குரலில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற “விஸ்வநாத் & சன்ஸ்” படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக இது பேசப்பட்டு வருகிறது.

முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை வண்ணமயமாக்கியுள்ளனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்தப் பாடலின் சிறப்பு அம்சம் சூர்யாவின் குரலில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் கென் கருணாஸ் இப்பாடலை எழுதியுள்ளார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

‘விஸ்வநாத்& சன்ஸ்’-ஐ சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர்    சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை வழங்குகிறது. வெங்கி அட்லூரி டைரக்ட் பண்ணியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது ‘விஸ்ஸநாத்& சன்ஸ்’.

-ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.