கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் ”தளிர் வசந்தம் – 2025” நுண்கலைப் போட்டி விழா !
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையிலான நுண்கலைப் போட்டி விழா தளிர் வசந்தம் – 2025 “சமத்துவத்தை நோக்கி ” என்ற தலைப்பில் நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கிடையிலான நுண்கலைத் திறனை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் 15 ஆம் ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்நிகழ்வில் தொடக்க விழாவில் திருச்சி மான்போர்ட் பள்ளியின் தாளாளர் இராபர்ட் லூர்துசாமி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி சூ.லூயிஸ் பிரிட்டோ அடிகள் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி அவர்கள் முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்புரை வழங்கிய சிறப்பு விருந்தினர் வளரும் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தையும் நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் வளர்த்தெடுப்பது கலைகள்தான்.
எனவே கலைகளை கற்பதன் வாயிலாக சமூக மாண்பை சமூக நல்லிணக்கத்தை சமத்துவத்தை மாணவர்களிடையே மனிதர்களிடையே வலுப்படுத்துவதற்கு அடிப்படையாக அமைகிறது. கலைகள் தான் மனிதப் நற்பண்பினை வளா்க்கிறது என்பதை வலியுறுத்தினார். தொடர்ந்து பத்து வகையான போட்டிகள் நடைபெற்றது.
செவ்வியல் நடனம் தனிநபர்,செவ்வியல் குரலிசை தனிநபர், மெல்லிசை குரலிசை தனிநபர், மெல்லிசை குரலிசை குழு, தாளக் கருவி இசை, நாட்டுப்புறப் பாடல், நாட்டுப்புற நடனம் என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது.
இப் போட்டிகளில் 26க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று படைப்பாற்றலை வழங்கினர். மாலை நிறைவு விழா பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எல்.ஏ. குழுமத்தின் தலைவர் திரு.ஜோசப் லூயிஸ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஒட்டுமொத்த போட்டிகளிலும் பங்கேற்று இரண்டாவது இடத்தை செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெற்றது. அதனைத் தொடர்ந்து 44 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை காட்டூர் மான் போர்ட் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் வெற்றிப் பதக்கத்தை பெற்றனர். விழியிழந்தோர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பார்வை மாற்றுத்திறன் மாணவிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கல்லூரியின் செயலர், முதல்வர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். முனைவர் லட்சுமி நன்றியுரை வழங்கினர். நிகழ்வை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி. சதீஷ் குமார், செல்வி. வின்சி, சீனிவாசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்வை முனைவர் லட்சுமி, முனைவர் சுனிதா, பேரா .கி. சதீஷ் குமார், பேரா. பிரகாஷ், முனைவர் இல. கோவிந்தன், முனைவர் இராஜேஷ் பாபு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.