அசோக் செல்வனின் மெகா பட்ஜெட் படம் நிறைவு!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் யுவராஜ் கணேசன்+ வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் இணைந்து தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அசோக் செல்வன், நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் மணிகண்டன் ஆனந்தன் டைரக்ட் பண்ணியுள்ளார்.
அசோக் செல்வனின் படங்களில் மிக அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், ரொமாண்டிக் த்ரில்லர் கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இசை: திபு நினன் தாமஸ் , ஒளிப்பதிவு: புஷ்பராஜ் சந்தோஷ், படத்தொகுப்பு: பரத் விக்ரமன், கலை இயக்குநர்: மகேந்திரன், பாடல்கள் :மோகன் ராஜன், மேக்கப் : பட்டணம் ரஷீத், ஒலி வடிவமைப்பு : உதயகுமார் , ( Sound Vibe Studios) நடனம் : அசார்
படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.