அங்குசம் சேனலில் இணைய

ஆன்லைனில் ”சிக்கன் ரைஸ்” பரிதாபமாக உயிரிழந்த வீராங்கனை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சென்னையில் ‘சிக்கன் ரைஸ்’ ஆன்லைனில் ஆா்டா் செய்து ராயில் பயணத்தின்போது சாப்பிட்ட வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவரு டையமகள் எலினா லாரெட் (15)- கூடைப்பந்து வீராங்கனையான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரெயிலில் மத்திய பிரதேசம் சென்றார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பின்னர் போட்டியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார். ரெயில் பயணத்தின்போது சாப்பிடுவதற்காக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து  சிக்கன் ரைஸ் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

வீராங்கனை உயிாிழப்பு
வீராங்கனை உயிாிழப்பு

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மாணவி எலினா லாரெட் சக மாணவிகளுடன் சேர்ந்து ரெயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டடு. இதுதொடா்பாக எலினா லாரெட் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினா் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார்.

அவா், ரெயில் சென்னை வந்ததும் எலினாவை அண்ணாநகர் 4-வது அவென்யூவில் உளள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சோ்ந்தார். சிகிச்கைக்கு பின்னர் எலினா, பெரவள்ளுரில் உள்ள தனது மற்றொரு உறவினா் வீட்டுக்கு சென்றார்.

அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவா் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினா்கள் அவரை மீட்டு பெரவள்ளுரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.

ஆஸ்பத்திரியில் எலினாவை பரிசோதனை செய்த டாக்டா்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பெரவள்ளுா் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக பெரவள்ளுா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனா்.

விளையாட சென்ற மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினா் மத்தியிலும் சக மாணவ-மாணவிகள் மத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.