முன்னே போனால் கடிக்கும் பின்னே போனால் உதைக்கும் ! ஜி.எஸ்.டி. பரிதாபங்கள் ! தொடா் 4

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ருடம் தோறும் கோடிகளில் பிசினஸ் செய்யும் தொழிலதிபர்கள் மூலப்பொருட்களை வாங்குபவர்களிடமும், அதனை வாங்கி விநியோகிக்கும் சப்ளையர்களிடமும் தொழில் ரீதியாக பேசி வியாபாரத்தை பெருக்குவதற்கு செலவிடும் நேரத்தைக் காட்டிலும், சரக்கு போக்குவரத்தை பின் தொடர்வதே பெரும் வேலையாகிவிடுகிறது என்பதாக புலம்புகிறார்கள்.

எந்த நேரத்தில், எந்த அதிகாரியிடம் சரக்கு வாகனம் சிக்கி, அதன் ஓட்டுநர் அலைபேசியில் அழைப்பார் என்ற பதைபதைப்பிலேயேதான் அந்த சரக்கு சென்று சேரும் வரையில் இருக்க வேண்டியதாகிறது என்கிறார்கள். எங்களையெல்லாம் திருடன்களாகவே பார்க்க பழகிவிட்டார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஏதோ கஞ்சா கடத்துகிறவன் போலீசுக்கு பயந்து போவதை போல, நாங்களும் மாறியிருக்கிறோம் என்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

தமிழகத்தின் ஒரு மாவட்டத்திலிருந்து பக்கத்து மாவட்டம் ஒன்றுக்கு அந்த சரக்கு சென்று சேர்ந்தாக வேண்டும். பயண நேரம் அதிகபட்சம் மூன்று மணிநேரம்தான். ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எந்தவிதமான பொருட்களை எடுத்துச் சென்றாலும், அது மூலப்பொருளாக இருக்கட்டும், விநியோகஸ்தரிடம் சப்ளை செய்வதற்கான பொருளாக இருக்கட்டும் லாரியில் சரக்கை ஏற்றிவிட்டால் இ-பில் கண்டிப்பாக பதிவு செய்தாக வேண்டும். எல்லாமே, ஆன்லைன் முறைதான்.

முறையான பதிவுகள், ஆவணங்களோடு, இ-வே பில்லோடு அந்த சரக்கு வாகனம் புறப்படுகிறது. போகிற வழியில் பழமையான பாலம் ஒன்றில் ஏற்பட்ட பழுதின் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல். வந்த வழியே திரும்பிச் சென்று மாற்று வழியை பிடித்து செல்வதென்றால் கூடுதல் நேரமும் ஆகும் டீசல் செலவும் அதிகமாகிவிடும். இதனை காரணமாக சொல்லி, சரக்கு வாகனத்திற்கான வாடகையை உயர்த்தி வாங்கவும் முடியாது. மூன்று மணி நேர பயண தூரத்தில் முக்கால் பாகம் பயண தூரத்தை கடந்து வந்தாயிற்று. மெல்ல நகர்ந்தாலும், இன்னும் ஒரு மணிநேரத்தில் சென்று சேர்ந்துவிடலாம் என்று சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் முடிவெடுக்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

வாகனமும் ஆமை வேகத்தில் மெல்ல ஊர்ந்து செல்கிறது. ஆனால், அவர் எதிர்பார்த்ததைவிட, கால தாமதம் அதிகமாகிறது. இப்போது, வந்த வழியே திரும்பவும் முடியாத அளவுக்கு வாகனங்கள் நெருக்கடித்துக்கொண்டு நிற்கின்றன. வேறு வழியே இல்லை.

இன்னும் இரண்டு மணி நேரம் ஆனாலும் அந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும். அவ்வாறே செல்கிறார். திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியைப் போலவே, ஜி.எஸ்.டி. அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த குறிப்பிட்ட சரக்கு வாகனத்தின் முன் வந்து நிற்கிறார்கள்.

ஓட்டுநரும் இ-வே பில்லை எடுத்து நீட்டுகிறார். ”இ- வே பில்லுக்கான நேரம் காலாவதியாகிவிட்டது. சரக்கை எங்கிருந்து கொண்டு வருகிறாய்? எங்கு கொண்டு செல்கிறாய்? பிராடு வேலை செய்கிறீர்களா?” என்று அதிகாரத்தோரணையில் மிரட்டுகிறார்கள்.

ஓட்டுநர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த அதிகாரி கேட்பதாக இல்லை. இது விதிமீறல் என்கிறார். எங்களை ஏமாற்றுகிறீர்கள் என்கிறார். ”இந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு சரக்கை எடுத்துச் செல்வதாக பொய்யாக ஒரு இ-வே பில்லை போட்டுக்கொண்டு, வழியில் பல ஊர்களில் சப்ளை செய்துவிட்டு ஏன் வந்திருக்கக்கூடாது?” என்று லாஜிக் கேள்வியை எழுப்புகிறார்.

ஓட்டுநர் சொல்வதில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை சம்பந்தபட்ட பகுதியின் போக்குவரத்து போலீசு அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டிருந்தாலே உண்மை தெரிய வந்திருக்கும். ”அவர்களிடம் எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சரி, தாமதம் ஆகிறது என்றால், அதனை அப்டேட் செய்து புதிய இ-வே பில் போட்டிருக்கலாமே” என்று ஆலோசனை சொல்கிறார், அந்த அதிகாரி.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதேபோல, ஒரு சம்பவம் மற்றொரு மாவட்டத்தில் நிகழ்ந்தபோது, இதுபோலவே பழைய இ-வே பில்லை ரத்து செய்துவிட்டு புதிய பில்லை போட்டதற்கு, “இந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு இவ்வளவு விரைவாக வந்து சேர்ந்துவிட்டாயா? இ-வே பில்லை இப்போதுதான் மோசடியாக பதிவு செய்திருக்கிறீர்கள்.” என்று அந்த மாவட்ட அதிகாரி அதற்காகவும் அபராதம் விதித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

”முன்னே போனால் கடிக்கும் பின்னே போனால் உதைக்கும்” என்ற கதைதான். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை என்பதும் அதற்கான வழிமுறைகள் என்பதும் நாடு முழுவதற்கும் பொதுவானதுதான். அவையெல்லாம் தெளிவாகவே வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் அணுகுமுறைகள்தான் இதுபோன்ற சிக்கல்களை ஏற்படுத்திவிடுகின்றன.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இவற்றையெல்லாம்விட, ஒரு சிறப்பு சம்பவம் ஒன்றும் நடந்தது. அப்படித்தான் ஒருநாள் வாகனத்தில் சரக்கை ஏற்றியாச்சு. இ-வே பில் மற்றும் சரக்கு குறித்த டாகுமெண்ட்களை தயார் செய்வதற்கு கொஞ்சம் நேரம் பிடித்திருக்கிறது. அதற்குள்ளாக, பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் வாகனத்திற்கு டீசல் பிடித்துவிடலாம் என்று முடிவெடுத்து வண்டியை எடுத்திருக்கிறார்.

கொஞ்ச தூரம் சென்று யு டர்ன் போட்டு திரும்ப வேண்டும். அதுபோலவே, வாகனமும் செல்கிறது. டீசல் நிரப்பிவிட்டும் திரும்புகிறது. வரும் வழியிலேயே, வாகனத்தை மறிக்கிறார்கள். இ- வே பில் இல்லாமல் வாகனத்தை இயக்கியதற்காக அபராதம் விதிப்பதற்கு தயாராகிவிட்டார்கள். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி, ஆடிட்டரை விட்டு பேச வைத்து வாகனத்தை கொண்டு வருவதற்குள் போதும் என்றாகிவிட்டது என்கிறார்கள்.

”அட, அதிகாரிகள் இப்படியெல்லாம்கூடவா கொஞ்சம் கூட நடைமுறை அறிவு இல்லாமல் நடந்து கொள்வார்கள்.” என்றுதான் யோசிக்கத் தோன்றும். ஆனால், உண்மையில் சில அதிகாரிகள் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். அவர்களை பகைத்துக் கொள்ளவும் முடியாது. பக்குவமாக எடுத்து சொல்லிதான், சில ஆயிரங்களை செலவு செய்தும்தான் வாகனத்தை மீட்டு வந்தாக வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

(பரிதாபங்கள் தொடரும்)

 

— ஆதிரன்.

G.S.T. பரிதாபங்கள் தொடா்-3 ஜ படிக்க click

ஜி.எஸ்.டி. பரிதாபங்கள் – தொடா் 3!

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.