விருதுநகா் – காவலர்களை லத்தியால் தாக்கி போதை ஆசாமிகள் !
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு மது போதையில் 9 பேர் கொண்ட கும்பல் இசக்கி என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இசக்கி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்ற காவலர்கள் ராம்குமார், கருப்பசாமி ஆகிய இருவரும் நேரு சிலை பின்புறமாக அமைந்துள்ள தனியார் மதுபான கூடம் அருகே ரோந்து சென்ற போது.
இசக்கி மீது தாக்குதல் நடத்திய கும்பல் இருப்பதை அறிந்து அவர்களிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்ட போது. திடீரென அந்த கும்பல் காவலர்களை தகாத வார்த்தையால் பேசி இருசக்கர வாகனத்தில் காவலர்கள் வைத்திருந்த லத்தியை எடுத்து காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினா்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது குறித்து தாக்கப்பட்ட காவலர்கள் அளித்த புகாரின் பேரில், கீழ ஆவரம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் கைது செய்து நிலையில் மேலும் இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய இருவரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் காவல் துணை கண்காணிப்பாளர் மீது தாக்குதல் அதன் பின்பு விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் கட்டாயம் லத்தி இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டிருந்த நிலையில் காவலர்கள் வைத்திருந்த லத்தியாலே காவலர்களை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
— மாரீஸ்வரன்.