திருச்சி வழக்கறிஞர் கொலைமுயற்சி சம்பவம் -5 பேர் கைது.. நடந்தது என்ன?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி வழக்கறிஞர் கொலைமுயற்சி சம்பவம் -5 பேர் கைது.. நடந்தது என்ன?

திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் அருகே கடந்த 15/12/2020 அன்று திருச்சி வழக்கறிஞரும் வீர முத்தரையர் சங்க நிர்வாகியுமான சந்துரு என்பவர் சம்பவத்தன்று சாஸ்திரி ரோடு இளங்கோ நகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது போன் அடித்தால் எடுத்து பேசி கொண்டு இருந்துள்ளார். அப்போது பின்னே டாட்டா சுமோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று சந்துருவை அரிவாளால் சரமாரியாக வெட்டியது இதில் வெட்டுப்பட்ட சந்துரு கத்திக்கொண்டே சாலையில் ஓட பின்தொடர்ந்து வந்த இந்த கும்பல் சிறிது தூரம் கழித்து சந்துரு சத்தமிட்டு செல்வதால் பொதுமக்கள் கூட ஆரம்பித்து விட்டனர். இதனால் அந்த மர்ம கும்பல் தப்பித்து ஓடியது. அதன் மூலம் சந்துருவை மீட்டெடுத்த பொதுமக்கள் தில்லை நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இந்நிலையில் சந்துருவின் ஆதரவாளர்கள் தனியார் மருத்துவமனை அருகே சாலையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி வாகன மறியலில் ஈடுபட்டனர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்நிலையில் ஸ்ரீரங்கம்  காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையிலான குழு மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.. அதில் சந்துருவுக்கு முன்பகை ஏதும் உள்ளதா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட அட்டாக்கா என்று துளவ ஆரம்பித்ததில் முதற்கட்டமாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்க்கையில் சம்பந்தப்பட்டவர்கள் உறையூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் வயது 38, உறையூர் பகுதியை சேர்ந்த திலீபன் வயது 35, உறையூர் பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி வயது 21, உறையூர்ப் பகுதியை வாசுதேவன் வயது 20, மற்றும் ராமலிங்கா நகரை சேர்ந்த தனபால் வயது 35, ஆகியோர் சந்துருவை வாகனத்தை பின் தொடர்ந்து வந்து அரிவாளால் வெட்டியதாக தெரியவந்தது அதன்மூலம் நேற்று 16/12/2020 மேற்கண்ட நபர்களை கைது செய்தனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் போலீசார் விசாரணையில் சந்துரு சமீபத்தில் செல்போன் வழக்கு ஒன்றில் ஆஜராகி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பின்தொடர்ந்து வந்ததாகவும் சம்பவத்தன்று தனியாக சந்துரு சென்றதால் தங்களது பிளான் படி அட்டாக்கில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சந்துருவின் உறவினர் ஒருவர் ஏற்கனவே கொலை வழக்கில் ஒன்றில் சம்பந்தப்பட்டு உள்ளார் என்றும் அதன் முடிவாக கூட இருந்திருக்கலாம் என்று துப்பு துலக்க ஆரம்பித்த போலீசார் இறுதியில் செல்போன் தொடர்பான வழக்கில்தான் இந்த அட்டாக் நடந்துள்ளது என்று போலீசார் விசாரணை முடிவில் தெரியவந்துள்ளது.

ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.