பா.இரஞ்சித்+ மாரி செல்வராஜ்+ துருவ் விக்ரம்= ‘பைசன் – காளமாடன்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

*பா.இரஞ்சித்+ மாரி செல்வராஜ்+ துருவ் விக்ரம்= ‘பைசன் -காளமாடன்’

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தமிழ்த் திரையுலகில் சிறந்த படைப்புகளை வழங்கவுள்ளன. முதல் படைப்பாக இளம் நட்சத்திர நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில், முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே 6ஆம் தேதி தொடங்கியது .’பரியேறும் பெருமாள்’ ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா. இரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Srirangam MLA palaniyandi birthday

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார், எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டிங் சக்திகுமார், கலை இயக்கம் மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன், , ஸ்டண்ட் திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம்.
“இப்படம் மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப்படைப்பாக, மிக உன்னதமான அனுபவத்தைத் தரும் ” என்கிறார் மாரி செல்வராஜ்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.