அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு ! டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சூரியமீனுக்கன் கிராமத்தில் தனியார் சோலார் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள கண்மாய் பகுதியில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பாஜக நிர்வாகி போராட்டம்உயர் மின் அழுத்த கோபுரம் கண்மாய் பகுதியில் அமைக்கப்படுவதால் நீர் நிலைபாதிப்புக்குள்ளவது மட்டுமின்றி, விவசாயம், கால்நடைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால் கண்மாய் பகுதியில்  உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தினை சேர்ந்த சரவணன் என்பவர் பணிகள் நடைபெற்று வரும் 130 அடி உயரமுள்ள  உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி பணிகளை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பாஜக நிர்வாகி போராட்டம்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சரவணனுடன் கயத்தார் தாசில்தார் சுந்தர ராகவன், கோவில்பட்டி டி.எஸ்.பி ஜெகநாதன் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

—   மணிபாரதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.