கூட்டணி பேச்சுவார்த்தைகள் முந்தும் பாஜக … பின்தங்கும் அதிமுக !

இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதிலும், வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேர்தல் களம் : கூட்டணி ரேஸ்சில் பாஜக முந்துகிறது அதிமுக பின்தங்குகிறது !

டந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிப்பு மார்ச்சு 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தில் உள்ள 3 தேர்தல் ஆணையர்களில் இருவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒருவர் மட்டுமே உள்ளார். தேர்தல் ஆணையராக இருவரைத் தேர்வு செய்யத் தலைமை அமைச்சர் மோடி தலைமையில் மார்ச்சு 15ஆம் தேதிதான் கூட்டம் நடைபெறவுள்ளது. தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள் பொறுப்பேற்ற பின்னர்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதிலும், வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தன் பழைய கூட்டாளிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்துவிட்டது. காங்கிரஸ் மற்றும் மதிமுக தவிர்த்து, மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளையும் அறிவித்துவிட்டது. திமுக விரைவில் வேட்பாளர்களையும் அறிவிக்க இருக்கின்றது என்பதைத் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பாஜகவோடு கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக ‘மெகா’ கூட்டணி அமைப்போம் என்று கூறிவந்தது. மெகா கூட்டணி பேச்சோடுதான் தற்போதைய வரை உள்ளது. அதிமுக கூட்டணியில் SDPI கட்சி, புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம். பார்வார்டு பிளாக் கட்சி, புதிய தமிழகம் போன்ற சிறு கட்சிகள் மட்டும்தான் இணைந்துள்ளன. அதிமுகவோடு கூட்டணி பேசிக் கொண்டிருந்த பாமக தற்போது பாஜகவோடு கூட்டணியில் சேரும் என்றும் பாஜக மத்திய அமைச்சர் பாமகவோடு நேரில் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக தற்போது அதிமுகவோடு கூட்டணி பேச்சுவார்த்தையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், தேமுதிகவோடும் பாஜக கூட்டணி பேசி வருவதாகவும் தகவல்கள் உள்ளன.

செ.கு.தமிழரசன்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதிமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று இந்தியக் குடியரசு கட்சியின் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார். கூட்டணியில் இணைந்தால் தன் கட்சி போட்டியிடத் திருவள்ளூர், காஞ்சிபுரம் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய நான்கு தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். அதிமுக செ.கு.தமிழரசனை இதுவரை கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. இனி அதிமுகவோடு கூட்டணி அமைக்கத் தமிழ்நாட்டில் கட்சிகள் இல்லை என்பதுதான் அதிமுகவின் போதாத காலமாக உள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்கவேண்டும் என்று கட்சிகளைத் தேடிப்பிடித்துக் கூட்டணி அமைத்து வருகின்றது. பாஜக கூட்டணியில் தற்போதுவரை இடம் பெற்றுள்ள கட்சிகளின் விவரம்: ஜி.கே.வாசனின் தமிழ்மாநிலக் காங்கிரஸ், பச்சமுத்து (எ) பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியனின் மக்கள் முன்னேற்றக் கழகம் – இக் கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன. பாஜக மீது கடுமையான விமர்சனம் வைத்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் பாஜகவோடு கூட்டணியை உறுதி செய்துள்ளார். அதைப்போலவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நடிகர் சரத்குமார், தன்னுடைய அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியைப் பாஜகவோடு இணைத்துவிட்டார். இதனால் பாஜக தமிழ்நாட்டில் கூடுதல் வலிமை பெற்றுள்ளதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாமக மற்றும் தேமுதிகவோடு பாஜக கூட்டணி பேசி வருகின்றது என்றும் அந்த இரு கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தமிழ்நாட்டில் உள்ள சில லெட்டர்பேடு கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் திரைமறைவில் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் திருவிழா கூட்டணி ரேஸ்லில் முதலிடத்தில் திமுக கூட்டணி இருந்து வருகின்றது. கூட்டணி அமைப்பதில் பாஜக – அதிமுக இடையே பெரும் போட்டி நடைபெற்றுவருகின்றது என்றாலும் தற்போதைய கூட்டணி ரேஸிலில் பாஜக முந்துகிறது என்பதும் அதிமுக பின்தங்கியே உள்ளது என்பதும் தமிழ்நாட்டின் களநிலவரமாக உள்ளது. இந்தக் களநிலவரம் எப்போது வேண்டுமானாலும் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.