பின்னிரவு 2 மணி ஃபேமஸ் சரத்குமார் ! நொந்து புலம்பும் பச்சமுத்து ஏ.சி.சண்முகம் & கோ !

எம்புருசன் சி.எம்.மாகணும்னு ஆசைப்பட்ட எங்கம்மாவே அதிர்ச்சியாகல. உங்களுக்கு என்ன கேடு? புடிச்சா ஒத்துக்க, புடிக்கலேன்னா பொத்திக்கிட்டுப் போ ...

0

பின்னிரவு 2 மணி ஃபேமஸ் சரத்குமார் ! நொந்து புலம்பும் பச்சமுத்து, ஏ.சி.சண்முகம் & கோ !

பா.ஜ.க.வுடன் சீட் பேரத்தையும் மற்ற பேரத்தையும் பேசப் போய், பேச்சுவாக்குல அ.இ.ச.ம.க.வையே அள்ளிக் கொடுத்த டிஜிட்டல் வள்ளலாக வானுயர்ந்து நிமிர்ந்து நிற்கிறார் ’சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார். ”கட்சியைத் தூக்கி பிஜேபிக்கு கொடுத்துவிட்டதால் என்னைப் பச்சோந்தி என்றோ, கோழை என்றோ எண்ணிவிடாதீர்கள்.  இருக்கின்ற கட்சியை இன்னொரு கட்சிக்குத் தூக்கிக் கொடுக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் இந்தியாவிலேயே எனக்கு ஒருவனுக்குத் தான் உண்டு என்பதைச் சொல்லிக் கொண்டு என உரையை முடிக்கிறேன். எனக்குப் பின் எனது மனைவி ராதிகா வீர உரை, எழுச்சியுரை ஆற்றுவார் என்பதைச் சொல்லிக் கொண்டு மீண்டும் எனது உரையை முடிக்கிறேன்”.

2 dhanalakshmi joseph

வீரத்தமிழச்சி ராதிகாவின் எழுச்சியுரை. “சிந்தனைச் சிற்பி. சயனைடு குப்பி, செயல் சிங்கம், கொள்கைப்புலி, பதினாறு வருசம் ஆனாலும் அனைவரையும் நேருக்கு நேர் சந்திக்கும் ஆற்றல் கொண்ட போர்வாள் எனது கணவர் சரத்குமார். என்னய்யா பண்ணுனாரு எம்புருஷன். ஏதோ ராத்திரி ரெண்டு மணிக்கு அவருக்கு முழிப்பு வந்துருச்சு. என்னையை உசுப்பி அங்க நான் சேரப்போறேன், உனக்கு ஓகேவான்னு கேட்டாரு. தாலி கட்ன புருசன் கேக்குறப்போ வேணாம்னு சொல்ல முடியுமா? உங்களுக்கு எழுச்சி வந்துருச்சுன்னா எனக்கு ஒண்ணும் அப்ஜெக்‌ஷன் இல்லேன்னு சொன்னேன். இது உங்களுக்குப் பொறுக்கலையா?

IJK News
IJK News
- Advertisement -

- Advertisement -

4 bismi svs

எம்புருசன் சி.எம்.மாகணும்னு ஆசைப்பட்ட எங்கம்மாவே அதிர்ச்சியாகல. உங்களுக்கு என்ன கேடு? புடிச்சா ஒத்துக்க, புடிக்கலேன்னா பொத்திக்கிட்டுப் போ” என பொங்கியெழுந்தார் ராதிகா சரத்குமார்.

தனது கட்சியை பா.ஜ.க.வுடன் சரத்குமார் இணைத்தாலும் இணைத்தார். ரெண்டு நாட்களாக மீம்ஸ்களிலும் ரீல்ஸ்களிலும் படாதபாடுபடுகிறார் சுப்ரீம் ஸ்டார். நம்ம பங்கிற்கு வண்டு முருகன் ஸ்டேஜ் ஸ்டைலில் யோசித்தோம். அவ்வளவு தான்.

சட்டுபுட்டுன்னு சரத்குமாருக்கு வந்த  இந்த ஐடியா தோணாமப் போச்சே என நொந்து புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம் ஐ.ஜே.கே., பு.நீ.க. தலைவர்கள் பச்சமுத்துவும் ஏ.சி.சண்முகமும்.

  • கரிகாலன்    

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.