அண்ணாமலை பாதயாத்திரைக்கு எதிராக கருப்பு கொடி காட்ட அனுமதி கேட்டு மனு !
அண்ணாமலையின் பாதயாத்திரையில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்கோரி போலீசில் மனு
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கம் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில்
மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஆனால் கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதை இந்த நாடே அறியும்.
அவர் கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளும் பாதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் ஜனநாயக முறைப்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அமைதியான முறையில் கருப்புக்கொடி ஏந்தி எங்களது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு அனுமதியும், இடமும் தேர்வு செய்து தக்க பாதுகாப்பும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.