பாடலூரை கலக்கி வரும் கஞ்சா… கல்லா கட்டி வரும் போலீசார்… !
பாடலூரை கலக்கி வரும் கஞ்சா… கல்லா கட்டி வரும் போலீசார்… !
பாடலூர் வேல்முருகன் என்பவர் தன்னுடைய முகநூலில்….
இன்றைய (ஞாயிறு) காலையில், பாடலூர் மெயின்ரோடு பகுதியில் நண்பர்களுடன் தேநீர் அருந்த சென்றோம். அப்பொழுது ஒருபையன் கடைகள் அதிகம் உள்ள பஜாரில் பெரிய ரவுடிதனம் செய்து தடியால் ஒரு தள்ளு வண்டியில் உள்ள கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டு தகாத வார்த்தையால் கத்தி கொண்டு பெரிய களேபரம் செய்து கொண்டிருந்தான். நண்பர்களுடன் அந்த இடத்திற்கு சென்ற எங்களை பார்த்ததும் நம்பர் பிளேட் இல்லாத டூவீலரை எடுத்து கொண்டு வேகமாக சென்றுவிட்டான்.
இது எங்களுக்கு சற்று நெருடலாகவே இருந்தது. இப்படி ரவுடிதனம் செய்பவர்களை கண்டிக்காமல் விட்டுவிட்டால் நாளை இன்னும் பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்துவிடுமே என எண்ணி நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் துணையுடன் அந்த பையனை தேடினோம்.
தேடலில் ஊட்டத்தூர் செல்லும் சாலையில் அந்த பையன் சிக்கினான். இந்த பையன் சிக்கிய போது தான் பாடலூரில் எவ்வளவு சிக்கல் உள்ளது என்பதை சிதைக்காமல் அந்த பையன் கூற கேட்டோம். நல்ல போதையில் இருந்த அந்த பையனை பிடித்து விசாரித்த போது அவன் அதிகளவு கஞ்சா சாப்பிட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே நாங்கள் பாடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தோம். இதனை கேட்ட அந்த பையன் கொடுத்த தகவலால் மலைத்து போனோம்.


தலைவரே கூப்பிடுங்க போலீசை எனக்கு கவலை இல்லை. நான் மட்டுமல்ல இந்த பாடலூரில் 10 வயது முதல் உள்ள பையன்களில் இருந்து கஞ்சா பிடிப்பவர்கள் அதிகமாக உள்ளனர் என அதிர்ச்சி தகவல் கொடுத்தான். மேலும் இதற்காக பாடலூர் காவல் நிலையத்திற்கு மாத மாதம் லட்ச கணக்கில் மாமூல் கொடுத்து வருகிறோம். என்னை எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது என போதையில் சில உண்மைகளை கக்கினான்.

மேலும் அவன், என்னிடம் உள்ள இந்த 3 ஆன்ட்ரைடு மொபைலும் திருடியது தான், நான் தற்போது ஓட்டி வந்த இந்த பல்ஷர் பைக்கும் சங்குபேட்டையில் இருந்து திருடி வந்ததுதான் என்னை என்ன முடியும். காவல்துறை எங்களுக்குதான் நண்பன் என கொழகொழனு பேசினாலும் நிறைய விஷயங்களை கக்கினான்.
நாங்கள் கொடுத்த தகவலின் பேரில் பாடலூர் காவல் நிலைய போலீசாரும் இவனை அள்ளி சென்றுள்ளனர். நாங்கள் வேண்டுவதெல்லாம் அந்த பையன் சொன்ன இந்த கஞ்சாவை கன்ட்ரோல் பன்னுங்க, கஞ்சாவால் இளைய சமுதாயம் சீரழிகிறது என்பது அவன் கொடுத்த தகவலில் இருந்து தெரிய வருகிறது.
ஒன்னு கஞ்சாவை காலி செய்ங்க, இல்லையேல் காவல் நிலையத்தை பாடலூரில் இருந்து காலி செய்திடுங்க, குற்ற செயல்களை நாங்கள் பார்த்துக்கிறோம். சரி செய்து கொள்கிறோம். என்று முன்னாள் பாடலூர் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் தன்னுடைய பதிவை முகநூலில் பகிர்ந்து இருக்கிறார்.. .
சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் கஞ்சா விற்பனையை தடுக்கிறார்களா ?, இது குறித்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்போம்…
