துறையூரில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது – லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி
துறையூரில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது – லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி
திருச்சி மாவட்டம் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வாளராக சத்தியமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று தனியார் டிரைவிங் ஸ்கூல் நடத்திவரும் துறையூரைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரது மகனான சண்முகம் என்பவரிடம் இலகுரக வாகனம் உரிமம் பெறுவதற்காக 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சண்முகம் புகார் அளித்தார்.
புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர் ராணி , பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் சண்முகத்திடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மோட்டார் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் தரக் கூறினர். அதுபோல் பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அலுவலகத்தில் ஆவணங்கள் மற்றும் பணம் இருக்கின்றதா என தீவிர சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் துறையூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.