மதுரையில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து 4 பேர் படுகாயம் !
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மேம்பால பணியில் சாரம் அமைக்கும் பணியின் போது, சாரம் விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 190 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நவ-28 அன்று இரவு அப்பகுதியில் சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது சாரம் சரிந்து விழுந்ததில், நான்கு பேர் காயமடைந்து மாதிரி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக கான்கீரிட் கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சி துறையூரை சேர்ந்த பழனி, அய்யங்காளை, காளி மற்றும் ஜெய்சன் என நான்கு பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.