உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில்  உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக மதுரை மாநகராட்சி சார்பாக 54 லட்சத்து 26 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக கால்நடை பரிசோதனை மையத்தில் தடுப்பு வேலி, மற்றும் வாடிவாசலுக்கு பின்புறம் காளைகள் இருக்கக்கூடிய இடங்களில் தடுப்பு வழிகள் அமைக்கப்பட்ட நிலையில். நேற்று முதல் முறையாக கட்டி தண்டவாள வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்றது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அதைத்தொடர்ந்து இன்று விழா மேடை, குடிநீர் மேடை அமைப்பது, சாலை இருபுறமும் பார்வையாளர்களை தடுக்கும் வேலி, சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முக்கிய அம்சமாக விளங்கக்கூடிய வாடிவாசல் அமைக்கும் பணி நேற்று தொடங்கி இன்றும் நடைபெற்று வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

எந்த முறையும் இல்லாத அளவிற்கு இந்த முறை தண்டவாள வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தண்டவாளம் வாடிவாசல் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் வாடிவாசல் பணியில் இன்றுடன் முடிவடையும் அதன் பின் மேடை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடு பணிகள் 70 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது முன்னேற்பாடு பணிகள் தீவிர படுத்தப்பட்டு காளைகள் சேகரிக்கும் இடம் மருத்துவ பரிசோதனை முடிந்து வாடிவாசல் நோக்கி வரக்கூடிய பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சவுக்கு மரங்களால் தடுப்பு அமைக்கப்பட்டு அதன் பின் இரும்பு தடுப்புகளால் வேலிகள் அமைக்கப்படும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

—    ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.