இது கூட ஆளுநருக்கு தெரியவில்லையா ? அன்றாடம் கலவரத்திற்கு காரணமானவர்களாக இருக்கலாமா? – கேள்வியெழுப்பும் ஐபெட்டோ வா.அண்ணாமலை
தமிழக சட்டசபைக்குள் நுழைந்த வெறும் மூன்றே நிமிடத்தில் வெளியேறியதோடு, “அரசியல் சாசனத்தை தேசிய கீதத்தை அவமதித்து விட்டார்கள்” என்று வழக்கம்போல, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூப்பாடு போட்டு சபையைவிட்டு வெளியேறிய நிகழ்வு குறித்து, கருத்து தெரிவித்திருக்கும் ஐபெட்டோ அகில இந்திய செயலாளரும் மூத்த ஆசிரியர் இயக்கவாதியுமான ஐபெட்டோ அண்ணாமலை, ”கல்விச்சாலைகளில் பள்ளி தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தினை பக்தியுடன் பாடுவோம்!.. பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுது தேசிய கீதத்தினை நாட்டுப்பற்றுடன் பாடி விடை பெறுவது வழக்கம். தொடக்கக் கல்வியில் பயிலும் மாணவர்கள் எங்களைப் பார்த்து கேட்கிறார்கள்.. இது கூட ஆளுநருக்கு தெரியவில்லையா என்று?” என்பதாக கேள்வியெழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
”ஜனவரி- 6 தமிழ்நாடு சட்டசபை கூட்டம் முதல் கூட்டமாக கூடியது. தேசிய கீதம் முதலில் இசைக்கப்படாததால் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தன் உரையைப் படிக்காமல் மூன்று நிமிடங்களில் மேதகு ஆளுநர் ஆர். என் .ரவி அவர்கள் வெளியேறினார்..
மேதகு ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் காலை 9.25 க்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்தபோது, பேண்ட் வாத்தியங்களுடன் காவல்துறை, மரியாதை அளிக்கப்பட்டது.
மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு அவர்கள், சட்டப் பேரவை செயலாளர் மதிப்புமிகு சீனிவாசன் அவர்கள், பூங்கொத்து, பொன்னாடை, புத்தகம் பரிசளித்து அழைத்து வந்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து வரவேற்றுள்ளார்கள். ஆளுநரும் வணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
மூன்று நிமிடத்தில் நடைபெற்றது என்ன…?
தேசிய கீதத்தை முதலில் இசைக்காமல்.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்த்தாய்.. வாழ்த்தினை முதலில் பாடியது அரசியல் சாசனத்தை தேசிய கீதத்தை அவமதித்து விட்டார்களாம்..?
நெஞ்சு பொறுக்குதில்லையே!!!!
தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட தேசபக்தி உள்ளவர்கள் பட்டியலினை வெளியிட முடியுமா….?
தமிழ்நாட்டு கலாச்சாரம், பண்பாடு, நடைமுறை தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாடுவது.. நிறைவாக தேசிய கீதத்தினை இசைப்பது… நீண்டகால நடைமுறை மரபாகும். மேதகு ஆளுநர் அவர்களின் மூன்றாண்டு கால நடவடிக்கைகளை நெஞ்சத்தில் பதிவு செய்து வருகிறோம்..
கல்விச்சாலைகளில் பள்ளி தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தினை பக்தியுடன் பாடுவோம்!.. பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுது தேசிய கீதத்தினை நாட்டுப்பற்றுடன் பாடி விடை பெறுவது வழக்கம்.
தொடக்கக் கல்வியில் பயிலும் மாணவர்கள் எங்களைப் பார்த்து கேட்கிறார்கள்.. இது கூட ஆளுநருக்கு தெரியவில்லையா என்று?..
நாடாளுமன்றத்தில் முதலில் தேசிய கீதம் இசைக்கட்டும்… தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவார்கள்……. மரபினை சிதைக்க முடியாது…
கவுரவமானவர்களுக்கு கவர்னர் பதவி?
நாட்டில் கலவரம் நடந்தால் கவர்னரிடம் சென்று பார்க்கலாம்..?.
அன்றாடம் கலவரத்திற்கு காரணமானவர்களாக இருக்கலாமா?..
அரசு அளித்த உரையே அவை குறிப்பில் இடம் பெறும் என பேரவையில் மூன்றாவது ஆண்டாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளுநர் பதவிக்கு அழகல்ல… என்று முதலமைச்சர் சொன்னார். முதலமைச்சர் உரையின் நிறைவிலேயே தேசிய கீதம்..
-அவை முன்னவர்
மரபை மதிக்காத ஆளுநர் பதவி விலக வேண்டும்
-கண்டனக் குரல்கள்!!!!!
தொடரும் ஆளுநரின் சர்ச்சைகள்…..
ஆளுநரின் புறக்கணிப்பினை அடுத்து பேரவை தலைவர் மாண்புமிகு மு.அப்பாவு அவர்கள் ஆளுநரின் உரையினை தமிழில் வாசித்தார்.
வாசித்தவர் ஆசிரியரல்லவா?..
பெருமிதம் கொள்கிறோம்!!!!!
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தேர்தல் வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளதா..?
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் தொழிற்சங்கங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளில் ஏதாவது ஒன்றாவது இடம் பெற்றுள்ளதா..?
07.01.2024 முரசொலி நாளிதழில் சபாநாயகர் தமிழில் வாசித்த உரை மூன்று முழு பக்கங்களில் (59) எண்ணுடன் நிறைவு பெற்றிருக்கிறது..
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்..!
வாழிய பாரத மணித்திரு நாடு..!
இவ்வாறு சட்ட சபை பேரவை தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு அவர்கள் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை படித்தார்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சங்கத் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தும் நன்றி தெரிவித்து வருவதால் எல்லாம் செய்து விட்டதாகவே முடிவுக்கு வந்துவிட்டார்களோ?..
தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளை இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் பட்டியலிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள்…
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் அவர்கள் நம்பிக்கை ஏற்படுத்தும் அறிவிப்பினை வெளியிடுவார்களா??
சட்டமன்ற உறுப்பினர்கள் நமக்காக குரல் கொடுப்பார்களா?.. ஆர்வப்பார்வையுடன் உள்ளோம்!..
தலைவர் கலைஞர், இனமான பேராசிரியர் அவர்களின் நினைவிடத்தில் இருந்து வெளிப்படுத்துகிறோம்…
அரசின் மீது அக்கறை கொண்டுள்ள இயக்கத்தின் மூத்த தலைவர்…” என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார், ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை.