அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முன்விரோத கொடூர கொலை…!

திருச்சியில் அடகு நகையை விற்க

கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவை சாலை டான்சி தொழிற்ச்சாலை எதிரில் இளநீர் கடையை சின்னாண்டாங்கோவிலை சேர்ந்த கிருஷ்ணன் @ கிருஷ்ணமூர்த்தி (DKV) என்பவர் நடத்தி வந்தார்.

கடந்த 18.09.2020 ஆம் தேதி பொங்கல் திருவிழா விளையாட்டு தொடர்பான முன்பகை காரணமாக மேற்படி கிருஷ்ணன் @ கிருஷ்ணமூர்த்தியை என்பவரை வழக்கின் எதிரிகள் 1. கோகுலகிருஷ்ணன், 2. பாண்டி @ துரைபாண்டி, 3. பிரேம்குமார், 4.மணிகண்டன், 5. காவ்யரமேஷ், 6. கேசவன், 7. அரவிந்த்குமார், 8. தமிழரசன், 9. அஜித், 10. செந்தில் @ செந்திலேஸ்வரன், 11. கலைசெல்வன், 12. விமல் பசீர் ஆகியோரால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

 

சம்மந்தமாக கரூர் நகர காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு அவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்கள்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இவ்வழக்கானது கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 18.03.2021 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு இவ்வழக்கில் இன்று 18.04.2026 A1, A2, A3, A4, A6, A7, A8, A9 0 A10 எதிரிகளுக்கு கொலை செய்த குற்றத்திற்காகவும், கொலைக்கு உடந்தையாக இருந்தமைக்காகவும், வன்கொடுமை தடுப்புச்சட்ட குற்றத்திற்காகவும் எதிரிகள் A2, A4, A7, A8, A9 மற்றும் A10 ஆகியோருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனையும் A1, A6 ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி திரு. K.H. இளவழகன் அவர்கள் தீர்ப்பளித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்திரவிட்டுள்ளார்.

மேற்படி தண்டனை பெற்ற குற்றவாளிகள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் A3 எதிரியானவர் தனது தண்டணையை விவாதிக்க மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று 21.04.2026 ஆம் தேதி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.

இதில் A3 எதிரியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மேற்படி A3 எதிரிக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்தும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்திரவிட்டுள்ளார். மேற்படி தண்டனை பெற்ற குற்றவாளி A3 திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கை சிறப்பாக புலன்விசாரணை செய்து எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த  C. முகேஷ் ஜெயக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர், கரூர் நகர உட்கோட்டம், (தற்போது) உதவி ஆணையர், கிண்டி சரகம், சென்னை, V.செல்வராஜ், துணை காவல் கண்காணிப்பாளர், கரூர் நகர உட்கோட்டம் மற்றும் சாட்சிகளை முறையாக ஆஜர் செய்த கரூர் நகர காவல் நிலைய நீதிமன்ற காவலர்கள் செல்லம்மாள், கார்த்திக்செல்வம் ஆகியோர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  D.N. ஹரி கிரண் பிரசாத் IPS. அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.