திருச்சியில் பிரபல தொழிலதிபரின் பேரன் 6 கோடி கேட்டு கடத்தல் ! கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு!
திருச்சியில் பிரபல தொழிலதிபரின் பேரன் 6 கோடி கேட்டு கடத்தல் !
கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு!
திருச்சியில் நேற்று (28/10/2020) மாலை கண்டோன்மெண்ட் வார்னர்ஸ் ரோட்டில் சைக்கிள் மிதித்து விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கடத்திய கும்பல் சிறுவனின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு “6 கோடி தந்தால் உன் மகனை உயிருடன் விடுவோம் என்றும் இல்லையென்றால் கொன்று விடுவோம்” என்று மாநகரம் சினிமா பாணியில் மிரட்டி உள்ளனர்.
மிரண்டு போன சிறுவனின் பெற்றோர் “அவ்வளவு தொகை எங்களால் தர முடியாது என்று கூற”, சிறுவனின் கை தான் உங்களுக்கு கிடைக்கும் என்று போனிலேயே அந்த மர்ம கும்பல் மிரட்டியுள்ளது.
இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் 28.10.2020 மாலை கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க போலீசார் தகவல் அறிந்து விசாரணை ஈடுபட்டு சிறுவன் கடத்தப்பட்ட வாகனம் எதுவென்று சிசிடிவி மூலம் கண்டறிந்து பின்னர் வாகனம் வயலூர் சாலையில் சென்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் உடனடியாக வாகனத்தை பின்தொடர்ந்து சென்று வளைத்தனர்.
போலீஸ் பின் தொடர்வதை கண்ட அந்த மர்ம கும்பல் ராமலிங்க நகர் அருகே வாகனத்தை விட்டு விட்டு தப்பித்து ஓடியது. சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக திருச்சி மாநகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் TN-30-L-1380 என்ற பொய்யான வாகன நம்பரை வைத்துக்கொண்டு சிறுவன் கடத்தப்பட்டது தெரியவந்தது.
கடத்தப்பட்டு மீட்கட்ட சிறுவன் திருச்சியின் முக்கிய தொழிலதிபரின் பேரன். இவர்களுக்கு திருச்சியில் டூவிலர் ஷோ ரூம், மருந்து மொத்த கொள்முதல், நகைக்கடை, செல்போன் ஏஜென்சி என பரந்து விரிந்து தொழில் செய்யும் மூன்று எழுத்து தொழில் அதிபர் குடும்பம் என்று விசாரணையில் தெரியவர தொழில்முனை போட்டியில் கடத்தினார்களா ? என்கிற ரீதியில் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-ஜித்தன்