அமைச்சரவை மாற்றம் -பட்டியல் தயார் செய்யும் முதல்வர் ?
திமுக 10 வருடத்திற்குப் பிறகு மே மாதம் 7ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாத காலமே ஆனா நிலையில் இரண்டு சட்டமன்ற கூட்டத்தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது திமுக. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சட்டமன்றத்தின் மாண்பு இருந்ததாக அதிமுகவைச் சேர்ந்த 9 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட செங்கோட்டையனே புகழும் அளவிற்கு சட்டமன்றம் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர்கள் பதில் அளித்தது, கேள்விகளை எதிர் கொண்டது, திட்டங்களை வைத்தது, தொகுதியில் மக்கள் பணி செய்தது, மாவட்டத்தின் பணியாற்றியது, கட்சித் தொண்டர்களிடம் பழகுவது, கட்சித் தொண்டர்களை வழிநடத்துவது என்று கடந்த 3 மாதமாக ஒவ்வொரு அமைச்சர்கள் செய்ததையும் ஃபையில் போட்டு முதல்வர் பெஞ்சில் வைக்கப்பட்டுள்ளதாம்.
என்னதான் அமைச்சர்கள் திறம்பட செயல்பட்டாலும் சில அமைச்சர்கள் செயல்பாடு போதவில்லை என்றும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம், மேலும் சில அமைச்சர்கள் துறை ரீதியாக திறம்பட செயல்பட்டாலும் ஆர்வக் கோளாறாக நடந்து கொள்வதாகவும், அந்த ஃபைலில் இருக்கக்கூடிய பேப்பர்களில் குறிக்கப்பட்டுள்ளதாம். சில அமைச்சர்கள் கட்சியினருடன் விலகி இருப்பதாகவும், சில அமைச்சர்கள் மக்களிடம் இருந்து விலகி இருப்பதும், தெரிவிக்கப்பட்டுள்ளதாம், அதோடு உள் அரசியல், வெளி அரசியல் என்று அமைச்சர்களின் 3மாத கண்ணசையும் வரையறுத்து பட்டியல் போட்டு வைக்கப்பட்டுள்ளதாம் அந்த ஃபைலில்.
மேலும் முதல்வரும் ஒவ்வொரு அமைச்சர்களின் அன்றாட நிகழ்வுகளையும் கண்காணித்து வருவதால் தற்போது அமைச்சரவையை மாற்றம் செய்யலாம் என்று திட்டம் தீட்டி இருக்கிறாராம்.
இப்படி சில ஜூனியர் அமைச்சர்களின் துறையை மாற்றம் செய்யவும், சில அமைச்சர்களையே ஏமாற்றும் செய்யவும் முடிவு செய்திருக்கிறாராம் முதல்வர்.
இந்தத் தகவல் கசியத் தொடங்கிய உடனே அறிவாலய வட்டாரங்கள் தலைவரும் ஜெயலலிதா பாணியை பின்பற்ற தொடங்கி விட்டார் போல தெரிகிறது…. தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை மாற்றுவது என்பது எப்போதாவது ஒருமுறை நடத்தக் கூடிய அதிசய நிகழ்வு. ஆனால் அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா அமைச்சரவையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக அமைச்சரவை மாற்றம் இருக்கும்.
இந்த வகையில் தலைவர் தளபதி ஆட்சிப் பொறுப்புக்கு வந்து மூன்று மாதத்திலேயே அமைச்சரவை மாற்றம் என்று செயல்பட தொடங்கி இருப்பது தலைவர் என்ன கணக்கு போடுகிறார் என்று பேசி வருகின்றனர்.