ரூ.500 கோடி சொத்து மோசடி ! 5 வழக்கறிஞர்கள் மீது வழக்கு !

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

ரூ.500 கோடி சொத்து மோசடி 5 வழக்கறிஞர்கள் மீது வழக்கு !

போலி உயில் தயாரித்து கேரளாவை சேர்ந்தவரிடம் ரூ.500 கோடி சொத்தை மோசடி செய்ததாக நெல்லை வக்கீல்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருநெல்வேலி போலி உயில் தயாரித்து கேரளாவை சேர்ந்தவரிடம் ரூ.500 கோடி சொத்தை மோசடி செய்ததாக நெல்லை வக்கீல்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வழுதக்காடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் சுவீந்திரன் (வயது 43). இவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் புகார் மனு கொடுத்தார்.

4

அந்த மனுவில், எனது தந்தை நடராஜனுக்கு தமிழகத்தில் மதுரை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சுமார் ரூ.500 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

இந்த நிலையில் எனது தந்தை இறப்பதற்கு முன்பு என் அண்ணன் ரவீந்திரன் சொத்தில் பெரும் பகுதியை உயில் எழுதி வைத்ததாக போலி உயில் தயார் செய்து ஏமாற்றிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அந்த மனு குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, ரவீந்திரன், போலி உயில் தயார் செய்த நெல்லையை சேர்ந்த நோட்டரி பெண் வக்கீல், அவரின் கணவரான மற்றொரு வக்கீல் மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட 2 பேர் என மொத்தம் 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

5
Leave A Reply

Your email address will not be published.