”அர்ச்சகர் நியமனத்தில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை” – ஆகமம் தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பும்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக, அந்தக் கோயிலின் அர்ச்சகர் சுப்பிரமணியம் குருக்கள் தொடுத்திருந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பும்; தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்து தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகிய இருவர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பும், ”அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு வலு சேர்த்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர், வா.ரங்கநாதனிடம் பேசினோம்.
“சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்த கோயில் நிர்வாக அதிகாரியின் உத்தரவை எதிர்த்து, அக்கோயில் அர்ச்சகர் சுப்பிரமணியம் குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ”சுகவனேஸ்வரர் கோயில் ஆகமத்தின் அடிப்படையிலானது. அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்பில் ஆகமம் இல்லை” என்பது அவரது வாதம். நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பாக விசாரணைக்கு வரப்பெற்ற இந்த வழக்கில், “ஆகமத்தின் இரு பகுதிகளில் ஒன்றான பூஜை, சடங்குகள் தொடர்பான விசயங்களில் அரசு தலையிட முடியாதென்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை உறுதி செய்த நீதிபதி, ஆகமத்தின் மற்றொரு பகுதியென பிராமண அர்ச்சகர்கள் கூறும் அர்ச்சகர் நியமனம் என்பது – மதச் சார்பற்ற நடவடிக்கை, அரசு , கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை ஆகியோர் சாதி வேறு பாடின்றி அர்ச்சகர் நியனத்தை மேற்கொள்ளலாம் என்றும்; விண்ணப்பிக்கும் அர்ச்சகர்கள் , சம்மந்தப்பட்ட கோயிலின் ஆகமத்தைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதி” என்பதை தனது தீர்ப்பில் தெளிவாக்கியுள்ளார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

வா.ரங்கநாதன்
வா.ரங்கநாதன்

உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள், நாராயண தீட்சிதலு, ஆதித்யன், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட அனைத்து தீர்ப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தெளிவானதொரு தீர்ப்பை ஆனந்த் வெங்கடேசன் வழங்கியுள்ளார். மிக முக்கியமாக, ஆகமத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் கருவறையில் பூஜை செய்ய முடியும் என்று சொல்லியிருந்தாலும் அது செல்லாது என்பதையும் தெளிவாக்கியிருக்கிறார். பரம்பரை வழி அர்ச்சகர் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிராகரித்த நீதிபதி, சாதியும் தகுதியல்ல என்பதை நிறுவியிருக்கிறார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

தலைமை நீதிபதி கங்காபூர்வாலா.
தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மிகச்சுருக்கமாக சொல்வதென்றால், ஆதிதிராவிடர், அருந்ததியர் முதல் ஸ்மார்த்த பிராமணர் வரையிலான சாதியில் உள்ள எவரும் முறையாக ஆகமம் கற்றுத் தேர்ந்தால் அர்ச்சகராகலாம் என்பதை சட்டவிதிகளின் துணைகொண்டு உறுதிபடுத்தியிருக்கிறார். அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் சுப்பிரமணியம் குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றிருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி ஆதிகேசவலு
நீதிபதி ஆதிகேசவலு

“ஆகம கோவில்களில் அர்ச்சகர்கள் பரம்பரையாக தான் நியமிக்க வேண்டும். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்ற கோரிக்கை மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்த நீதிபதிகள், அவரது தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும், “அர்ச்சகர் நியமனத்தில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை. யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்.” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்
நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்

அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில், ஒரு முட்டுக்கட்டையை அகற்றும் விதமாக அமைந்திருக்கிறது என்ற அளவில் ஆறுதல் தரும் தீர்ப்பு இது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கும் பொருட்டு செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர், உயர்நீதிமன்ற நீதிபதிகள். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு செல்வதற்கு முன்பாக, அரச்சகர் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர், வா.ரங்கநாதன்.

– இளங்கதிர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.