மலேசியாவில் கொலை செய்யப்பட்ட பட்டுக்கோட்டை இளைஞர்!

0

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட
பட்டுக்கோட்டை இளைஞர்!

மலேசியாவில் வேலை செய்துவந்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் மர்ம நபர்களால் கொலை செய்ய்பட்டுள்ளார்.

2 dhanalakshmi joseph

இதற்கிடையே, மர்ம கும்பல் ஒன்று அவரது குடும்பத்தினரை சில தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு அவரை ஊருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ஏமாற்றி ரூ.7 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளது.

- Advertisement -

- Advertisement -

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மன்னை நகர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன்-வசந்தா தம்பதியினரின் மகன் விநாயகமூர்த்தி. வயது 41.

 

இவருக்கு திருமணமாகி புகழ் என்ற மனைவி, ஆதித்யன் (5), ஹத்திஹா (3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்

இந்நிலையில், இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு உள்ளுர் ஏஜெண்ட் ஒருவர் மூலம் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

நிரந்தர விசாவிற்காக அவர் ஒரு லட்ச ரூபாய் கட்டிய நிலையில், மேற்படி ஏஜெண்ட் அவரை ஏமாற்றி டூரிஸ்ட் விசாவில் மலேசியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, விநாயகமூர்த்தி மலேசியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விநாயகமூர்த்தியின் தந்தை அன்பழகனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

மறுமுனையில் பேசிய மர்ம நபர் தன்னை விநாயகமூர்த்தியின் முதலாளி என அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘உங்கள் மகன் விநாயகமூர்த்தியை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

4 bismi svs

மேலும், ‘இது தொடர்பாக வேறு யாரிடமும் எதுவும் கூறக்கூடாது. மீறினால் உங்கள் மகனைக் கொன்றுவிடுவோம்’ என அந்த நபர் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அன்பழகன் இதுபற்றி வேறு எவரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அன்பழகன் மிகவும் சிரமப்பட்டு ரூ.7 லட்சம் தயார் செய்து அத் தகவலை மலேசியாவில் இருந்து பேசிய நபரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த மர்ம நபர் ‘ நான் ஒரு பத்து ரூபாய் நோட்டை அனுப்பி வைக்கிறேன். அதே நம்பரைக் கொண்ட பத்து ரூபாயுடன் ஒரு நபர் உங்கள் வீட்டிற்கு வருவார். அவரிடம் பணத்தைக் கொடுத்து அனுப்புங்க’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதியன்று அன்பழகன் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்பட்டிருந்த அதே பத்து ரூபாய் நோட்டைக் காண்பித்து, அன்பழகனிடமிருந்து ரூ.7 லட்சத்தை பெற்றுச் சென்றுள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த கும்பல் கேட்டபடி பணத்தை கொடுத்துவிட்டதால் தனது மகன் விநாயகமூர்த்தி விரைவில் வீடு வந்து சேர்வான் என அவரது பெற்றோர் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், மலேசியாவில் இருந்து நேற்று (சனிக்கிழமை) அன்பழகனைத் தொடர்பு கொண்டு பேசிய அவரது உறவினர் ஒருவர், விநாயகமூர்த்தியை அக்கும்பல் கொன்று அவரது உடலை ஒரு மூட்டையில் கட்டி வீதியில் வீசிச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

இத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அன்பழன் இதுபற்றி பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

தனது மகனின் உடலை மீட்டுத் தர வேண்டும் என்றும் அன்பழகன் கூறியுள்ளார்.

மேலும், விநாயகமூர்த்தியை கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்களது மகனை ஏமாற்றி டூரிஸ்ட் விசாவில் மலேசியாவுக்கு அனுப்பி வைத்த ஏஜெண்டை கைது செய்ய வேண்டும்.

தங்களது வீட்டிற்கு வந்து ரூ.7 லட்சம் பெற்றுச் சென்ற நபரைக் கைது செய்ய வேண்டும் என அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.