சுதந்திர போராட்ட தியாகி மனைவியிடம் 67 இலட்சம் ஆட்டைய போட்ட தொழில் அதிபர் பி.கே.பி.

பணத்துக்கு பதில் அதோட மதிப்புக்கு நிலத்தை கொடுனு கேட்டேன். உடனே, தே**மவளேனுலாம் ஏகத்துக்கும் பேசி, மரத்துல கட்டி வச்சி தோல உரிச்சிபுடுவேன்னு

0

சுதந்திர போராட்ட தியாகி மனைவியிடம் 67 இலட்சம் ஆட்டைய போட்ட தொழில் அதிபர் பி.கே.பி.

பி.கே.பி. என்றழைக்கப்படும் தருமபுரியைச் சேர்ந்த தொழிலதிபர் பி.கே.பவுன்ராஜ், ”கடனாக வாங்கிய பணம் 67 இலட்சத்தை திருப்பித்தராமல் ஏழாண்டுகளாக ஏமாற்றி வருகிறார்; பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்” என தருமபுரி போலீஸ் எஸ்.பி.யிடம் புகார் அளித்திருக்கிறார், 85 வயதான பாட்டி பார்வதி.

பார்வதி பாட்டி
பார்வதி பாட்டி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், முள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகியான பி.எம்.வடிவேல் என்பவரது மனைவிதான் பார்வதி. ஒழுங்குமுறை விற்பணைக்கூடம் அமைப்பதற்கென, இவர்களுக்குச் சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக 75 இலட்சம் கிடைத்திருக்கிறது.

வீடியோ லிங்….

தியாகி பி.எம்.வடிவேலுவின் சொந்த தங்கை மகனும் தருமபுரியில் பி.கே.பி.குரூப்ஸ் என்ற பெயரில் பல்வேறு தொழில்களை செய்துவரும் தொழிலதிபருமான பி.கே.பவுன்ராஜ், தியாகி பி.எம்.வடிவேலுவிடம் அந்தப் பணத்தை கடனாக தருமாறு கேட்டிருக்கிறார். கோழிப்பண்ணை, ஸ்பின்னிங் மில் உள்ளிட்டு பல்வேறு தொழில்களை செய்துவருபவர்; சொந்த தங்கை மகனும்கூட; வேறு வழியின்றி பணத்தை தர பி.எம்.வடிவேலு ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பண பரிமாற்றம்
பண பரிமாற்றம்

”பேங்க விட கூட வட்டி தாரேன்… உனக்கு வெண்கல சிலை வைக்கிறேன்..”னு நைச்சியமாகப் பேசியே காரியத்தை சாதித்திருக்கிறார். அதேசமயம், தந்திரமான முறையில், பிக்சட் டெபாசிட் செய்யபட்டிருந்த 75 இலட்சத்தை அப்படியே எடுக்காமல், அதன் மீது அவர்களே கடன் பெறுவது போன்ற ஏற்பாட்டில் 67 இலட்சத்தை வாங்கியிருக்கிறார்.

வீடியோ லிங்

இதன்படி, கடந்த 18.08.2016 அன்று தியாகி பி.எம்.வடிவேல் கணக்கிலிருந்து 31 இலட்சம்; 20.08.2016 அன்று மனைவி பார்வதி கணக்கிலிருந்து 36 இலட்சமும் ஆக மொத்தம் 67 இலட்சம் அவர்களது வங்கிக்கணக்கிலிருந்து நேரடியாக பி.கே.பி.யின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

பாட்டி பார்வதி
பாட்டி பார்வதி

சில மாதங்கள் கழித்து, வங்கியிலிருந்து வட்டிப்பணம் செலுத்துமாறு கோரிய பிறகுதான் தங்களது பிக்சட் டெபாசிட்டின் மீதான வட்டிக்கடனாகத்தான் 67 இலட்சம் பி.கே.பி.க்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல்கூட, இந்த வயதான தம்பதியினருக்கு தெரிய வந்திருக்கிறது. வங்கி அதிகாரிகளை வளைத்துப்போட்டு, 70 வயதை கடந்த மூத்த குடிமக்களின் கணக்கிலிருந்து இவ்வளவு பெரிய தொகை பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதோடு, குறைந்தபட்சம் அவர்களது இரண்டு மகன்களுக்குக்கூட தெரியப்படுத்தாமல் காதும் காதும் வைத்தாற்போல முடித்திருக்கின்றனர்.

பார்வதி பாட்டி -PKP
பார்வதி பாட்டி -PKP

அதிலும் குறிப்பாக, வயது முதிர்வின் காரணமாக வங்கிக்குக்கூட செல்ல முடியாத நிலையில், தியாகி பி.எம்.வடிவேலுவின் வீட்டுக்கே வங்கி அதிகாரிகளை வரவழைத்து தேவையான ஆவணங்களில் கையெழுத்து வாங்கியிருக்கிறார், பி.கே.பி.
பணத்தை வாங்கியதோடு சரி. சொன்னபடி, மாதாமாதம் வட்டிப்பணமும் கொடுக்கவில்லை. அசலையும் திருப்பித் தருவதற்கான எண்ணமும் இல்லை. இதற்கிடையில், கடந்த 2017 இல் தியாகி பி.எம்.வடிவேலும் இறந்துவிட, பி.கே.பி.க்கு வசதியாக போய்விட்டது. ஆதரவற்ற பாட்டி பார்வதியை ஏய்த்துவிடலாம் என எண்ணிவிட்டார் போல. உச்சக்கட்டமாக, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்காக பார்வதிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார், பி.கே.பி.

பிகேபி
PKP_

“கர்நாடகாவுல குவாரி இருக்குது. 250 கோடி வரவேண்டி இருக்கிறது. வந்ததும் தருகிறேன் என்றுதான் முதலில் சொன்னார். பின்னர், மண்குவாரியில் சிக்கலாச்சு. வழக்கு நடக்குது. பிரச்சினை முடிஞ்சதும் தருகிறேன் என்றார். 18-07-22 இல் வட்டி பணம்னு ஒரு 10 இலட்சம் கொடுத்தாரு. அதுக்கப்புறம் எதுவும் தரல. இதுக்கு இடையில, அவங்களுக்கு சொந்தமான இடத்தை விக்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சாங்க. ஒன்னு பணம் கொடு. இல்லைன்னா, பணத்துக்கு பதில் அதோட மதிப்புக்கு நிலத்தை கொடுனு கேட்டேன். உடனே, தே**மவளேனுலாம் ஏகத்துக்கும் பேசி, மரத்துல கட்டி வச்சி தோல உரிச்சிபுடுவேன்னு மிரட்ட ஆரம்பிச்சாரு.

வீடியோ லிங்

“நானே 500 கோடிக்கு அதிபதி. கர்நாடகா துணை முதல்வர் என்னோட நண்பர். தமிழ்நாட்டில் பெரிய போலீஸ் அதிகாரிகள் எல்லாம் நான் சொல்றதை செய்வாங்க. சுப்ரீம் கோர்ட் போனாலும் ஒன்னும் பண்ண முடியாது. அங்க கபில்சிபல் இருக்காரு.”னு…” மிரட்டுராரு. எனக்கும் எனக்கு ஆதரவா இருக்க இளைய மகன் சுகுமாறனுக்கும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா அதுக்கு பி.கே.பி.தான் பொறுப்பு” என கண் கலங்குகிறார், பார்வதி.

பி.கே.பி.
பி.கே.பி. தொழில் அதிபர்

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான டீலிங் தொடங்கி, பி.கே.பி.யின் சார்பில் நேரடியாக மிரட்டியது வரையில் ஆரம்பம் முதலாகவே கூடவே இருக்கும் பி.கே.பி.யின் உறவினரும் அவரது உதவியாளருமான ரமேஷ் அவர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டோம். ”நீங்க சொல்ற யாரையும் தெரியாது. நம்பரை பார்த்துப் போடுங்க”னு படார்னு இணைப்பை துண்டித்துவிட்டார்.
குற்றச்சாட்டுக்குள்ளான பி.கே.பி.யை தொடர்புகொள்ள முயற்சித்தோம். நமது அழைப்பை ஏற்கும் நிலையில் அவர் இல்லை. ”பார்வதி வடிவேல் அவர்களின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்கவே தொடர்புகொண்டிருக்கிறோம்.” என குறுந்தகவல் அனுப்பியும் அவரிடமிருந்து இதுவரை பதிலில்லை.

எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம்
எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம்

பார்வதி கொடுத்த கம்ப்ளைண்ட் குறித்து, தருமபுரி எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களிடம் பேசினோம். புகார் குறித்த முழுமையான விவரத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டவர், “இது குறித்து முறையாக விசாரித்துவிட்டு சொல்கிறேன்.” என்றார் பொறுப்பாக.

வீடியோ லிங்

”போலீசு அதிகாரிகளுக்கும், முதல்வருக்கும் புகார் அளித்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். இல்லையெனில், சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருப்பதை தவிர வேறு வழியில்லை.” என்கிறார், பார்வதி. 85 வயதில் நா தழுதழுக்க!

-விசாகன்

Leave A Reply

Your email address will not be published.