திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளை மூட தயாரா ? கடம்பூர் செ.ராஜூ
தமிழ் வாழ்க என்று இங்கு கூப்பாடு போடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் மோடி, அமித்ஷா முன்னாடி கூச்சல் இட தயாரா?
திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளை மூட தயாரா ? முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கேள்வி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ,, பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் பின்னர் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில்
என்றைக்கும் தேர்தல் வரும் உதயசூரியனை விரட்டி விட்டு இரட்டை இலையை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
2011ல் ஜெயலலிதா பதவி ஏற்றதும் தமிழகத்தில் இருந்து ரெளடிகள், குற்றவாளிகள் வெளி மாநிலத்திற்கு ஓடி விட்டனர்.
கடந்த அதிமுக 10 ஆண்டுகளில் அமைதி பூங்காவாக இருந்தது. தற்பொழுது அமலிக்காடாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் மீது குற்றச்சாட்டு வந்ததும் அவரை உடனடியாக சிறையில் அடைந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
தமிழ் வாழ்க என்று இங்கு கூப்பாடு போடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் மோடி, அமித்ஷா முன்னாடி கூச்சல் இட தயாரா?
திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளை மூட தயாரா ? அவர்கள் மூடினாலே தமிழகத்தில் பாதி அளவு இந்தி கற்றுக் கொடுப்பது குறைந்துவிடும். நாட்டுக்கு ஒரு சட்டம் வீட்டுக்கு சட்டம் என்பது தான் திமுக. நிழலின் அருமை வெயிலில் போனால் தான் தெரியும்.
2026ல் சூரியன் மறைய போகிறது . குளிர்ச்சி தரும் இரட்டை இலை மலரும். அதிமுக ஆட்சியும் வெகு தொலைவில் இல்லை என்றார்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில்,
அதிமுகவில் கிளைச் செயலாளர் பணியை தொடங்கி ஒன்றிய கவுன்சிலர் சேர்மன் என்று உயர்ந்தேன். என்னுடைய உயரத்திற்கு இது போதும் என்று நினைத்தேன்.
சட்டமன்ற தேர்தலுக்காக போட்டியிட அதிமுக சார்பில் நேர்காணலுக்கு சென்றபோது என்னுடன் வழக்கறிஞர் ஒருவர் வந்திருந்தார். படித்தவர் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் நாம் அவர் வெற்றி பெற உழைப்பேன் என்று நினைத்திருந்தேன்.
வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை வேட்பாளராக அறிவித்ததை ரேடியோவில் கேட்டு தான் தெரிந்து கொண்டேன்.

அதேபோன்று சென்னையில் இருந்து ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது என்னை போனில் அழைத்து எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இப்படி எந்த ஒரு தலைவரும் செய்ததில்லை அதை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தார்.
கோவில்பட்டியில் கூட பாலியல் வன்கொடுமையால் ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு ஒரு அரசா.
ஒவ்வொரு கிராமத்திலும் சாராயக்கடைகளை (டாஸ்மாக்) திறந்து வைத்துள்ளனர். பெண்கள் இன்றைக்கு கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் ஆண்கள் மதுவினால் சீரழிந்து வருகின்றனர்.
வருங்காலத்தில் இளைஞர்கள் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களாக மாறிவிடு நிலை உள்ளது. யாரையும் கண்டிக்க முடியவில்லை.
தமிழ்மொழி நமக்கு வேண்டும். நம்முடைய கொள்கை இரு மொழிக் கொள்கை.
ஒவ்வொருவரும் அவங்க தேவைக்கு ஒரு மொழியை படிச்சிட்டு போறான் உங்களுக்கு என்ன ?
நீங்க (திமுக) உங்க குடும்பத்தினர் இன்டர்நேஷனல் பள்ளி நடத்துகிறீர்கள் . அதற்கு அனுமதி கொடுப்பதும் நீங்கள் தானே. அதனை நிறுத்திட வேண்டியதுதானே.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் விவசாயத்திற்காக நிறைய தடுப்பணைகளை அமைத்தார். குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்தார். எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாயி ஒரு ஏக்கருக்கு எத்தனை வாழை கன்று வைக்கணும்னு சொன்னா அவருக்கு தெரியும்.
நீங்க (முதல்வர் மு க ஸ்டாலின்) விவசாய நிலத்திற்கு போவதற்கே ரோடு போட்டு செருப்பு போட்டு போறீங்க.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உங்களால் சாராயக்கடைகளை (டாஸ்மாக்) நிறுத்த முடியுதா ? இதை மறைக்கிறதுக்கு இந்தி தமிழ் என்ற ஏதேதோ சொல்லி மக்களை மறக்க வைக்க நினைக்கிறார்கள்.
கூட்டணி என்ற போர்வையில் கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. தற்போது உங்களை மக்கள் விரட்ட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவும் மகனும் வாரிசு அரசியல் செய்கிறார்கள்.
திமுக ஆட்சியில் பத்து ரூபாய்க்கு 50 ரூபாய்க்கும் அமைச்சர்கள் இருக்கிறார்கள் . ஒவ்வொரு அரசு பணிக்கும் (காண்ட்ராக்ட்) 25 சதவீதம் கமிஷன் வாங்குகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இரவு தூங்கும் போது நாளை நாம் மந்திரியாக இருப்போமா என்று எங்களுக்கு தெரியாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அவ்வளவு பயத்தோடு இருந்தோம் என்றார்.
— மணிபாரதி.