அங்குசம் சேனலில் இணைய

விருதுநகரில் மிளகாய் பொடி தூவி காவல் உதவி ஆய்வாளர் மனைவியிடம் செயின் பறிப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் சாலையில் உள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கார்மெண்ட்ஸில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவரது மனைவி முத்துமாரி வயது 45 கார்மெண்ட்ஸ் கடையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் காலை 11 மணியளவில் அவர் பணியாற்றி வரும் கார்மெண்ட்ஸ் கடையை திறந்து வேலை பார்த்து வந்துள்ளார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

செயின் பறிப்பு சம்பவம்
செயின் பறிப்பு சம்பவம்

அது சமயம் ஹெல்மெட் அணிந்தபடி கடைக்குள் புகுந்த மர்ம நபர் தனியாக பணியாற்றி வந்த முத்துமாரி மீது  மிளகாய் பொடி தூவி அவர்  அணிந்திருந்த தங்கச் செயினை  பறித்து தப்பிவிட முயற்சித்துள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஹெல்மெட் அணிந்த நபர் தனது தங்க செயினை பறிக்க முயற்சிப்பதை அறிந்த முத்துமாரி மர்ம நபருடன் போராடிய நிலையில் கைப்பிடி அளவு செயின் மட்டும் ஹெல்மெட் அணிந்த நபர் கைவசம் சென்று விடவே உடனடியாக சுதாரித்துக் கொண்ட முத்துமாரி கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர் கையில் கிடைத்த செயனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

செயின் பறிப்பு சம்பவம்
செயின் பறிப்பு சம்பவம்

இதனை அடுத்து முத்துமாரி கூச்சல் இட்டதை கண்டு அங்கு வந்த பொதுமக்கள் இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தற்பொழுது செயின் பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ஆட்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய பகுதியில் காவல்துறை சார்பு ஆய்வாளர் மனைவியிடமே ஹெல்மெட் அணிந்தவாரு மர்ம நபா் செயின் பிடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

—    மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.