அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்து மழையில் ‘சந்திரமுகி 2’ படக் குழுவினர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்து மழையில் ‘சந்திரமுகி 2’ படக் குழுவினர்

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இந்தத் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் தயாராகி உலகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘சந்திரமுகி 2’ வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது.‌ படத்தைப் பற்றிய நேர் நிலையான விமர்சனங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாவதால் படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதற்காக அவர்கள் முன் பதிவு செய்து படத்தை ரசிக்க காத்திருக்கிறார்கள்.‌

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் வகையில் வடிவேலுவின் காமெடி, ராகவா லாரன்ஸின் நடிப்பு, சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கணா ரனாவத்தின் பேய் அவதாரம்… ஆகியவற்றால் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தில் ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திரத்திற்கும் ரசிகர்களிடம் பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தை பிரத்யேகமாக பார்வையிட்டு, பட குழுவினரை உற்சாகப்படுத்தும் வகையில் வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்திருப்பது திரையுலகினத்தினரிடமும், ரசிகர்களிடமும் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக தற்போது இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.