அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘சென்னை சிட்டி கேங்கர்ஸ்’ 

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்ப்பு : பி.டி.ஜி. யுனிவர்சல். பாபி பாலசந்திரன், வியூகத் தலைமை : டாக்டர் மனோஜ் பெனோ. டைரக்‌ஷன் : விக்ர்ம் ராஜேஷ்வர் & அருண் கேசவ். நடிகர்-நடிகைகள் : வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், லிவிங்ஸ்டன், ரெடின் கிங்ஸ்லி, சாம்ஸ், ஷிஹான் ஹுசைனி. ஒளிப்பதிவு : டிஜோ டோமி, இசை : டி.இமான், எடிட்டிங் : சுரேஷ் பிரசாத், பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே.அஹமத் & பாரஸ் ரியாஸ்.

சென்னை சிட்டி கேங்கர்ஸ்வைபவும் மணிகண்டா ராஜேஷும் சின்னச் சின்ன திருட்டுத் தொழில் செய்யும் கேடிகள். போலீசில் மாட்டும் இவர்களை அவ்வப்போது காப்பாற்றி அடைக்கலம் தருகிறார் லிவிங்ஸ்டன். இவரது மகள் அதுல்யா ரவி. ஆனந்தராஜ் தலைமையிலான ஜான்விஜய், சுனில் ரெட்டி, மொட்டை ராஜேந்திரன் கோஷ்டியினர் ஒரு பேங்கை கொள்ளையடிக்கும் முயற்சியில் போலீசில் மாட்டி, 15 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியில் வருகிறார்கள். இருந்தாலும் அதே பேங்கை கொள்ளையடிக்க வைபவ், மணிகண்டாராஜேஷ் கூட்டணியைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு மீண்டும் கொள்ளையடிக்க களம் இறங்குகிறார்கள். இந்த கோஷ்டியின் கொள்ளைத் திட்டம் சக்சஸா? இல்ல மீண்டும் போலீசில் சிக்குகிறார்களா? என்பதை இரண்டு மணி நேரம் ஒன்பதுநிமிடம் படுகேவலமாக படமாக்கி வெளிவந்திருப்பது தான் இந்த ‘சென்னை சிட்டி கேங்கர்ஸ்’.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வைபவ் உட்பட நடிகர்கள் பட்டியலில் உள்ளவர்கள் அனைவருமே காமெடியில் எக்ஸ்பெர்ட்டானவர்கள் தான். ஆனால் டைரக்டர் தம்பிகளின் தள்ளாட்டமான கதையும் ததிகினத்தோம் போடும் திரைக்கதையும் காமெடி என்ற பெயரில்  நாம் கதறக்கதற கழுத்தறுக்கிறார்கள். ”எவனாவது சிரிச்சீக… சோலிய முடிச்சிருவோம்” என்ற கொலைவெறியுடன் ரசிகர்கள் மீது பாய்ந்திருக்கிறார்கள் விக்ரம் ராஜேஷ்வரும் அருண் கேசவும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சென்னை சிட்டி கேங்கர்ஸ்தயாரிப்பாளர் பாபிபாலசந்திரன் ஏகப்பட்ட நாடுகளில் பல தொழில்களில் கொடிகட்டிப் பறப்பவராம். இவருக்கு வியூகத் தலைமையாக இருப்பவர் மனோஜ்பெனோவாம். என்னத்த கொடிகட்டிப் பறந்து…என்னத்த வியூகத்தை வகுத்துக் கிழிக்கிறாய்ங்களோ….

Admission Enquiry Form

அட போங்கய்யா… உங்க சினிமா வியூகத்துல தீய வைக்க. உங்ககிட்ட காசு கொழுத்துப் போய் கிடந்துச்சுன்னா…. எங்கள ஏன்யா சாவடிக்கிறீக?

 

—   மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.