அங்குசம் சேனலில் இணைய

கங்கனா ரணவத்தின் கண்ணியமும்… நயன்தாராவின் அடாவடியும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கங்கனா ரணவத்தின் கண்ணியமும்… நயன்தாராவின் அடாவடியும்!

பிஜே.பி. யின் ஊதுகுழலாக இருக்கும் இந்தி நடிகை கங்கனா ரணவத்தின் உளறலை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் ஒரு படத்தின் ஹீரோயினாக, அப்படத்தின் புரமோஷனுக்காக அவர் தரும் ஒத்துழைப்பும் கண்ணியமும் பாராட் டுக்குரியது. லைக்கா தயாரித்திருக்கும்’ சந்திரமுகி-2’ படத்தின் முதல் புரமோ நிகழ்ச்சியை சென்னை புறநகரில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் பிரம் மாண்டமாக நடத்தினார் சுபாஸ்கரன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

அதில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து ஸ்பெஷல் ஃப்ளைட்டில் வந்தார் கங்கனா. இந்நிகழ்ச்சி முடிந்து நான்கு நாட்களில், சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த டிரைலர் லாஞ் நிகழ்ச்சியிலும் அகற்கடுத்த இரண்டே நாட்களில் சென்னை தரமணியில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்த பிரஸ் மீட்டிலும் கலந்து கொண்டார் கங்கனா. இதுபோக சந்திரமுகி-2′ தெலுங்கு வெர்ஷனுக்காக ஹைதராபாத்தில் நடந்த மூன்று புரமோஷன்கள், இந்திக்காக மும்பையில் நடந்த புரமோஷன்கள் என பதினைந்து நாட்களில் தொடர்ச்சியாக எட்டு புரமோக்களில் கலந்து கொண்டார் கங்கனா.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆனால் கைவசம் படங்களே இல்லாவிட்டாலும் நயன்தாராவின் திமிர்த்தனமும் அடாவடியும் குறையவேயில்லை. தனது சொந்தப் படம், சொந்தப் புருஷன் படம் என்றால் ரிலீசுக்குப் பின்பும் கூட, தியேட்டர் தியேட்டராக ஓடிப் போய் புரமோட் பண்ணுவார் நயன். ஆனால் ஜவான் படத்தின் டிரைலர் லாஞ்ச் நிகழ்ச்சியன்று சென்னையில் இருந்தும் செல்லாமல் ஷாருக்கானை கடுப்பாக்கினார் நயன். முகம் சுருங்கிப் போய், பாடி ஷேப் பல்லிளித்துப் போனாலும் நயன்தாராவின் அடாவடி குணம் மாறவேயில்லை. அதான் நயன்.

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.