உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை : மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள்
வளர்த்தால் கடும் நடவடிக்கை :
மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

உரிமம் பெறாமல் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் வளர்ப்பதும், அவை சாலைகளில் சாலையில் திரிவதும் கண்டறியப்பட்டால் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்டவிதிகளின்படி அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இதுகுறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் வளர்க்கும் பொதுமக்கள் அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க உரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிமம் பெற்று செல்லப் பிராணிகள் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2003-ன்படி செல்லப்பிராணி ஒன்றுக்கு ரூ.2,500 வீதம் பணம் செலுத்தி உரிய உரிமம் பெற்று, அதில் கூறப்பட்டுள்ள சட்டதிரட்டங்களுக்கு உட்பட்டு செல்லப் பிராணிகள் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்தப்படுகின்றனர்.

உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்ப்பதும், அவை சாலையில் திரிவதும் கண்டறியப்பட்டால் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பறிமுதல் செய்யப்படுவதுடன்,  சட்டவிதிகளின்படி அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.