அங்குசம் சேனலில் இணைய

இன்சூரன்ஸ் கிளைம் செய்கிறோம் ஊழியர்கள் வார்த்தையால் விபரீதம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கடலங்குடி கீழத்தெருவை சேர்ந்த தொழிலாளி முனுசாமி (45). இவர் மனைவி சுதா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். முனுசாமி, தனது குடும்ப தேவைக்காக மயிலாடுதுறை தனியார் வங்கியில் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.ஒரு லட்சத்து 60 ஆயிரம் குழு கடன் பெற்று மாதத் தவணை கட்டி வந்தார்.

அண்மையில் விபத்தில் முனுசாமி காயமடைந் ததால் மாத தவணை செலுத்த முடியவில்லை. கடன் வசூலிக்க முனுசாமி வீட்டுக்கு வந்த ஊழியர்கள், “கடன் தவணையை கட்ட முடியவில்லை என்றால் செத்துப்போ. இன்சூரன்ஸ் கிளைம் செய்து கொள் கிறோம்” என கூறியுள்ளனர். மனமுடைந்த முனு சாமி, கடந்த மாதம் 26ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு முனுசாமி இறந்தார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பொதுமக் கள் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சேத்திரபாலபுரம் பகுதியில் சாலை மறி யலில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை – கும்பகோணம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை ஆர்டிஓ விஷ்ணுபிரியா, டிஎஸ்பி திருப்பதி, குத்தாலம் தாசில்தார் சத்தியபாமா, இன்ஸ் பெக்டர் ஜோதிராமன் ஆகியோர் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர். எந்த வங்கி அல்லது எந்த நிறுவன ஊழியர்கள் முனுசாமியை மிரட்டினர் என்பது குறித்து போலீசார்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

விசாரித்து வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.