கூட்டுக்கொள்ளை – வேளாண்மைத்துறை அவலம்

- வெற்றிவேந்தன்

0

கூட்டுப்பண்ணைத் திட்டத்தில்

கூட்டுக்கொள்ளை!

https://businesstrichy.com/the-royal-mahal/

-வேளாண்மைத்துறை அவலம்!

தமிழக அரசின் சார்பில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படியான திட்டங்களில் ஒன்றாக உள்ளது “கலெக்டிவ் பார்மிங்” என்று கூறப்படும் கூட்டுப்பண்ணை திட்டம்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

கூட்டுப்பண்ணை திட்டத்தின்கீழ் ஒரு கிராமத்தில் 18 வயதிலிருந்து 80 வயது வரையிலான 20 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ‘விவசாய ஆர்வலர் குழு’ தொடங்கப்படும்.  இப்படி தொடங்கப்பட்ட 5 விவசாய ஆர்வலர் குழுவை ஒன்றிணைத்து ‘உழவர் உற்பத்தியாளர் குழு’ உருவாக்கப்படும்.  இந்தக் குழுவில், சுமார் 100 விவசாயிகள் இருப்பார்கள். இக்குழுவே தலைவர், செயலாளர், பொருளாளர்களை உருவாக்கிக் கொள்வார்கள்.  சுயஉதவி குழுக்கள் போல ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.   இப்படி, சென்னையைத்  தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பல்வேறு உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் உள்ளன.  ஒவ்வொரு குழுவிற்கும் 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள், வேளாண்மைத்துறையின்  உதவி நிர்வாக அலுவலரின் (Assistant Administrative Officer-AAO) கண்காணிப்பில் இயங்குகின்றன.  இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியிலிருந்து டிராக்டர்,  மக்கா சோள அறுவை எந்திரம், வைக்கோல்  கட்டும் கருவி, பவர் டிரில்லர், புதர் அகற்றும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, தட்டை வெட்டும் கருவி, நேரடி நெல்விதை விதைக்கும் கருவி, கொத்து கலப்பை, வார்ப்பு இறகு கலப்பை, களையெடுக்கும் கருவி என பல்வேறு வேளாண் இயந்திரங்களை, 2021-22 வேளாண்மை  பொறியியல் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்களிடம்  இருந்து வாங்கிக் கொள்ளலாம். இந்தக் கூட்டுப்பண்ணை திட்டத்தின் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கும் போது, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று வேளாண்துறை அதிகாரிகளால் நிர்பந்திக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளன. இக்குற்றச்சாட்டு குறித்து நாம் வேளாண்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

உழவர் உற்பத்தியாளர் குழுவானது, தமிழக அரசின் வேளாண் பொறியாளர் துறை அனுமதி கொடுத்த எந்த நிறுவனத்திடமும் இருந்து தங்களுக்குத்  தேவையானவேளாண் எந்திரங்களையும் கருவிகளையும் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால், அப்படி தாங்கள் விரும்பிய நிறுவனத்திடம் வாங்குவது குறித்து விண்ணப்பிக்கும் போது,  குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் மட்டும் எந்திரங்கள், கருவிகள் வாங்கினால் மட்டுமே உங்களது குழுவின் வங்கிக் கணக்கிற்கு நிதியை அனுப்ப முடியும் என்று கூறிவருகிறார்கள். இதனால், தாங்கள் விரும்பிய  நிறுவனத்துடன் தரமான எந்திரங்களையும் கருவிகளையும் வாங்க முடியாமல் திண்டாடி வருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.

 

உதவி நிர்வாக அலுவலர், ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொடுத்திருப்பார்.  கூட்டுப்பண்ணை திட்டத்திற்கு  வரக்கூடிய நிதி எல்லாமே அந்த  குழுவின் வங்கிக் கணக்குக்குத் தான் செல்லும். தலைவர்,  செயலாளர்,  பொருளாளர் தலைமையிலான கூட்டம் நடத்தி  மூவரும்  தீர்மானம் நிறைவேற்றி  கையெழுத்து போட்டால் மட்டுமே அந்த நிதியை  எடுக்க முடியும்.  அதுமட்டுமல்ல, ஏ.ஏ.ஓ.விற்கு மேலே உள்ள  வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ரிலீஸிங் ஆர்டர் கொடுத்தால் மட்டுமே  அந்த குழுவிலுள்ளவர்கள் அந்த தொகையை எடுக்கமுடியும்.

ஆனால், “நாங்கள் சொல்லும் நிறுவனத்திடம் நீங்கள் எந்திரங்கள், கருவிகளை வாங்க ஆர்டர் கொடுக்கவில்லை என்றால் உங்கள் குழுவுக்கான நிதியை எடுக்க ரிலீஸிங் ஆர்டர் கொடுக்கமுடியாது” என்று அதிகாரிகளால் மிரட்டப்படுவதால் வேறு வழியில்லாமல் அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்துவருவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள் விவசாயிகள். குறிப்பாக தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகே ‘கலெக்டிவ் பார்மிங்’ நிதியின் கீழ் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் இருந்து மட்டுமே இயந்திரங்களை வாங்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்கின்றனர். இதற்காக 15 சதவீதம் கமிஷன் பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. எதிர்த்து கேள்வி கேட்கும் பிற நிறுவனங்களுக்கு கூட அதிகாரிகள் சரியான காரணங்களையும் பதில்களையும் கூறாமல் அலட்சியப்படுத்துகிறார்களாம்.  அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும் நிறுவனம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறுகின்றனர். நடைபெறும் முறைகேடுகள் குறித்து அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தெரியுமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

நாம் இது குறித்து விசாரணை செய்வதை அறிந்ததும், ”நீங்கள் எந்த நிறுவன   பொருளை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் நாங்கள் நிர்ணயிக்கும் பொருளின் விலைக்குரிய ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்” எனக் கூறி தமிழகம் முழுக்க மாவட்டந்தோறும் இதற்கென ஒரு ஏஜென்ஸி மற்றும் கமிஷன் ஏஜென்ட்டை நியமித்திருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை விசாரித்து இம்முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.