தொடர் வாகனங்களை திருடும்  துறையூர் வாலிபர்கள் கைது.

0

தொடர் வாகனங்களை திருடும்  துறையூர் வாலிபர்கள் கைது.

 

திருச்சி மாவட்டம் , துறையூர் கோணப் பாதை அருகே சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நிற்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு டிராக்டர் வண்டியுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை விசாரித்தனர்.

அப்பொழுது அவரது பெயர் ராமராஜ் என்பதும் , துறையூர் அருகே உள்ள கோணப்பாதை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது அவரிடம் இருந்த டிராக்டர் வண்டிக்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவருடன் சேர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்ட மண்ணச்சநல்லூர் தாலுகா, வாலையூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கோணப்பாதை கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் மணி என்ற வாலிபர்களுடன் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ராமராஜ் தனது வீட்டின் அருகே உள்ள குண்டாற்று பாலம் அடியில் 2 டிராக்டர், 4 டிப்பர் ,ஒரு தண்ணீர் டேங்க் லாரி ஆகியவற்றை தார்ப்பாய் கொண்டு மூடி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ரூ 25 லட்சம் மதிப்பிலான வாகனங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில் , லாரி சொந்தமாக வாங்கி அதன் மூலம் கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் தனது நண்பர்களுடன் இது போன்ற திருட்டில் ஈடுபட்டதாக ராமராஜ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து கோணப்பாதையைச் சேர்ந்த மணி என்ற நபர் தலைமறைவாகி விட , மற்ற 3 பேர் மீது துறையூர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து , கைது செய்து துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.